சனி, 26 ஆகஸ்ட், 2017

பூமிப் பந்தின் புதிர்களை விடுவித்தல்.






கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதை படிவங்களானது, கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும்,தீவுகளிலும்,காணப் படுவதுடன்,கடல் மட்டத்தில் இருந்து,இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையிலும்,டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் மற்றும் மரங்களின் புதை படிவங்கள்,கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் அடிப்படையில், டைனோசர்கள் காலத்தில்,கடல் மட்டமானது,தற்பொழுது இருப்பதைக் காட்டிலும்,இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பது,ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
அதே போன்று,வெப்ப மண்டலக் கால நிலை நிலவக் கூடிய பகுதிகளில், வாழக் கூடிய,முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடிய, டைனோசர்களின் புதை படிவங்களானது,தற்பொழுது,வட துருவப் பகுதியிலும், அதே போன்று,தென் துருவப் பனித் தீவுக் கண்டமான அண்டார்க்டிக் கண்டத்திலும்,பனிப் படலங்களுக்கு அடியில்,கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் அடிப்படையிலும்,டைனோசர்கள் காலத்தில்,கடல் மட்டமானது தாழ்வாக இருந்திருப்பதுடன்,கடலின் பரப்பளவும்  குறைவாக இருந்திருப்பதுடன், பூமியின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருப்பதும்,துருவப் பகுதிகளில், பனிப் படலங்களுக்குப் பதில்,பசுமைக் காடுகள் இருந்திருப்பதும்,அதன் பிறகு,பூமிக்குள் இருந்து சுரந்த நீரால்,கடல் மட்டமானது,இரண்டு கிலோ மீட்டர்,உயர்ந்து இருப்பதும்,அதனால் துருவப் பகுதிகளில்,பனிப் படலங்கள்  உருவாகி இருப்பதும்,தெரிய வந்துள்ளது.

அத்துடன்,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது,குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது,பிரியும் நீரால் கடல் மட்டம்  உயர்ந்து கொண்டு இருப்பதும்,அதனால் பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதுடன்,பூமிக்கு அடியில்,பெரும் பகுதியாகப் பாறைக் குழம்பு இருப்பதால்,கடல் மட்டமானது,தொடர்ந்து உயர்ந்து,மலைகள் உள்பட ஏழு கண்டங்களையும் மூழ்கடிக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக