வியாழன், 12 மார்ச், 2015

எரிமலைகள் வெடித்ததால் ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது.ஆய்வறிக்கை.

தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு தவறான விளக்கம் கூறப் படுகிறது.

அதாவது துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

இந்த நிலையில் ஒரே கால கட்டத்தில் கடல் மட்ட உயர்வும், பனிப் பொழிவும், ஏற்பட்டு இருப்பது, புதை படிவ ஆதாரங்கள் மூலம், தெரிய வந்துள்ளது.

குறிப்பாக வட அமெரிக்கக் கண்டத்தில் புளோரிடா மாகாணக் கடற் பகுதியில்,கடலுக்கு அடியில் சரிந்து செல்லும் பாறைகளில்,ஐம்பது முதல் நூறு மீட்டர் ஆழத்தில்,பளவப் பாறை உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன.

இந்தப் பவளப் பாறை உயிரினங்களானது சூரிய ஒளி புகக் கூடிய,ஆழமற்ற கடல் பகுதியில் வாழக் கூடியது.கடல் மட்டம் உயரும் பொழுது இந்த பவளப் பாறை உயிரினங்களானதுசூரிய ஒளியின்றி இறந்து விடும்.அப்பொழுது அதன் உடலால் சுரக்கப் பட்ட சுண்ணாம்புப் பொருட்கள் புதை படிவங்களாக மாறி விடுகின்றன.

இந்த நிலையில் வெவ்வேறு ஆழத்தில் காணப் பட்ட, பவளப் பாறை புதை படிவங்களை மதிப்பிட்டதன் அடிப்படையில்,கடல் மட்டமானது,கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கால கட்டத்தில்,நானூறு அடி உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதே போன்று ஆஸ்திரேலியாக் கடல் பகுதியிலும் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும்,பவளப் பாறைத் திட்டுகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையிலும், கடல் மட்டமானது 400 அடி வரை தாழ்வாக இருந்து...உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலயில்,வட துருவப் பகுதியில் பனிப் படலங்களுக்கு அடியில் மட்கிக் கிடந்த தாவரங்களின் பாகங்கள் மற்றும் இறந்து கிடந்த விலங்கினங்களின் கழிவுகள்,மற்றும் அவைகளின் வயிற்றில் பாதி செரித்த நிலையில் இருந்த உணவுப் பொருட்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில்,கோபன்கேகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில் ஏற்பட்ட பனிப் பொழிவால், வட துருவப் பகுதியில் பூக்கும் தாவரங்கள் அழிந்ததால்,அவற்றை உண்டு வாழ்ந்த, பனி யானைகள் மற்றும் பனி காண்டா மிருகங்கள் போன்ற விலங்கினங்கள் அழிந்திருப்பதாகத் தெரிவித்து உள்ளனர்.

இவ்வாறு 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில், கடல் மட்டமும் 400 அடி வரை உயர்ந்து இருப்பதுடன்.அதே கால கட்டத்தில் பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பதால்,பனிப் படலங்கள் உருகுவதால்தான் கடல் மட்டம் உயர்ந்து இருக்கிறது, என்று கூறப் படும் விளக்கம் தவறு என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இந்த நிலையில், பூமிக்கு அடியில் அறுநூற்றி அறுபது கிலோ மீட்டர் ஆழத்தில், கடலில் இருக்கும் நீரை விட மூன்று மடங்கு அதிகமான நீர், இருப்பதை நில அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில் தெரிய வந்துள்ளதாக, நார்த் வெஸ்ட்டர்ன் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஜாக்கப்சன் என்ற புவியியல் வல்லுநர் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் அவர் பூமிக்கு மேலே இருக்கும் நீரானது, பூமிக்கு உள்ளே இருந்து வந்திருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார்.

இதற்கு முன்பு, விண்வெளியில் திரிந்து கொண்டு இருந்த பனிப் பாறைகள்,கோடிக் கணக்கில் பூமியில் விழுந்ததால்தான், பூமியில் கடல் உருவானதாக நம்பப் பட்டது.

இந்த நிலையில் ஜப்பானில் உள்ள சுடுநீர் ஊற்றுக்களில் இருந்து வெளியான நீரைப் பகுப்பாய்வு செய்த, டாக்டர் யோசித்தா என்ற புவியியல் வல்லுநர் ,அந்த நீரானது பூமியின் மிக ஆழத்தில் உள்ள பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீர் என்பதை, அதில் உள்ள ஐசொட்டோப்புகளின் அடிப்படையில் கண்டு பிடித்துள்ளார்.

இதே போன்று கடலுக்கு அடியில் எண்ணற்ற அளவில் சுடு நீர் ஊற்றுக்கள் இருப்பது அறியப் பட்டுள்ளது.எனவே கோடிக் கணக்கான ஆண்டுகளாக சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளி வந்த நீரால்தான் கடல் உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில்,நார்வே நாட்டுக் கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் தரையில் எண்ணெய் எடுப்பதற்காகத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில், இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, பிளேட்டியோசாராஸ் என்று அழைக்கப் படும் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை, நார்வே மற்றும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

இதே போன்று, இந்தியப் பெருங் கடலுக்கு அடியிலும், கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும், ஒரு கடலடிப் பீட பூமியில் இருந்து எடுக்கப் பட்ட, ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில், மரங்களின் கருகிய பாகாங்கள்,விதை,மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

எனவே டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதுடன்,கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக  நிரூபணமாகியுள்ளது.

எனவே அண்டார்க்டிக்கா போன்ற தீவுக் கண்டங்களில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது, தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததும்,கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்ததுமே காரணம்.

ஆனால் தற்பொழுது  அண்டார்க்டிக்கா போன்ற தீவுக் கண்டங்களில் கூட டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, முன் ஒரு காலத்தில் எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும்,பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் தவறான விளக்கம் கூறப் படுகிறது.

ஆனால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் புதை படிவங்களுக்கு விளக்கம் கூறும் புவியியல் மற்றும் விலங்கியல் வல்லுனர்களால் வட துருவப் பகுதியில், குறிப்பாக அலாஸ்கா மற்றும் சைபீரியாவின் வட பகுதிகளில் ,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்களுக்கு விளக்கம் கூற இயல வில்லை.

ஏனென்றால் கண்டத் தட்டு நகர்சிக் கருத்தின்படி, அலாஸ்கா மற்றும் சைபீரியாவின் வட பகுதிகளானது ,கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே ,ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் வந்து விட்டதாக புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

ஆனால் தற்பொழுது அலாஸ்கா மற்றும் சைபீரியாவின் வட பகுதிகளில் ஆண்டு சராசரி வெப்ப நிலையானது இருபது செண்டி கிரேடாகஇருக்கிறது.ஆனால் ஊர்வன வகை விலங்கினத்தின் முட்டைகள் பொரிய முப்பது டிகிரி செண்டி கிரேட் தேவை.

எனவே முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்த ஊர்வன வகை விலங்கினமான டைனோசர்கள்,எப்படி துருவப் பகுதிகளில் இனப் பெருக்கம் செய்து வாழ்ந்தன? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நிச்சயம் தற்பொழுது பனிப் பிரதேசமாக இருக்கும் துருவப் பகுதிகளில் டைனோசர்கள் போன்ற ஊர்வன வகை விலங்கினங்களால் முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து இருக்க இயலாது.

எனவே டைனோசர்கள் காலத்தில் துருவப் பகுதிகளில் ,பூமத்திய ரேகைப் பகுதியில் நிலவுவதைப் போன்று அதிக வெப்ப நிலை நிலவி இருந்திருப்பது துருவப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இதே போன்று, பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால்,  துருவப் பகுதிகளில் ஆறு மாத காலம் தொடர்ந்து பகலும், அதே போன்று ஆறு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.

இது போன்று ஆறு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால், ,தாவரங்களால் சூரிய ஒளியின்றி ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து உயிர் வாழ்ந்து இருக்க இயலாது.

எனவே டைனோசர்களின் அழிவுக்குப் பிறகே பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டு இருக்கிறது.பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டதற்கு,பூமிக்கு அருகில் சென்ற குருங் கோளின் ஈர்ப்பு விசை காரணமாக இருந்திருக்கலாம். 

இந்த நிலையில் அண்டார்க்டிக்கா போன்ற தீவுக் கண்டங்களில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து இருந்த பிறகு,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

ஆனால் கண்டங்களானது கடல் தரையைப் பிளந்து கொண்டு நகர்ந்து சென்றதற்கு ஆதாரம் இல்லை என்றும்,அதனால் கண்டங்களானது கடல் தரையுடன் சேர்ந்து, தனித் தனியாகக் கண்டத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

அவ்வாறு கண்டங்களானது கடல் தரையுடன் தனித் தனியாக நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் புவியியலாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

ஆனால் இந்தக் கருத்தின் அடிப்படையில் கடந்த 12-01-2010 அன்று ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் புவியியலாளர்களால் விளக்கம் கூற இயல வில்லை.

நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் விளக்கம் கூறும் தகுதி புவியியல் வல்லுனர்களுக்கு இல்லை.

கடந்த 12.01.2010 அன்று ,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள, ஹைத்தி தீவில் கடுமையான நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதில்,இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

அந்த நில அதிர்ச்சி ஏன் ஏற்பட்டது என்பதற்கு அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் ஒரு வினோதமான விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.

அதாவது ,ஹைத்தி தீவு அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது ஒரு பாறைத் தட்டின் மேல் இருப்பதாகவும்,அந்தப் பாறைத் தட்டானது,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொருத்த மட்டில் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்( the Caribbean plate moving eastward with respect to the North America plate),அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால், நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாக, அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த, புவியியல் வல்லுனர்கள் வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.

அதாவது,புவியியல் வல்லுனர்கள் நம்பும் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி, வட அமெரிக்கக் கண்டமானது அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் தொடந்து உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

இதே போன்று தென் அமெரிக்கக் கண்டமானது அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

இந்த நிலையில் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே உருவாகி எப்படி தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது?எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று புவியியல் வல்லுனர்களுக்குத் தெரிய வில்லை.

சில புவியியல் வல்லுனர்கள் கரீபியன் தீவுக் கூட்டமானது ,பசிபிக் கடல் பகுதியில்,குறிப்பாக தற்பொழுது காலபாகஸ் தீவுக் கூட்டம் இருக்கும் இடத்தில் உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கலாம் என்றும் தற்பொழுது கரீபியன் தீவுக் கூட்டமானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கலாம் என்று நம்புகின்றனர்.இந்த விளக்கம் 'பசிபிக் மாடல்'  என்று அழைக்கப் படுகிறது.

குறிப்பாக பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பசிபிக் கடல் கடல் தளத்திற்கு அடியில் இருந்த எரிமலைப் பிளம்புகள் மேல் நோக்கி உயர்ந்து,கடல் தளத்தைத் துளைத்தால்,கடல் தளத்திற்கு மேலே கரீபியன் தீவுகள்  கூட்டமாக உருவான பிறகு,கரீபியன் தீவுக் கூட்டதிற்கு அடியில் இருந்த கடல் தளமானது ,ஒரு தனிப் பாறைத் தட்டாக உருவனதாகவும்,அதன் பிறகு,கடல் தளத்திற்கு அடியில் இருந்த பாறைக் குழம்பானது, சக்கரம் போன்று சுழன்றதால் ,கரீபியன் பாறைத் தட்டானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாக நம்பப் படுகிறது.

குறிப்பாக எரிமலைத் தீவுகள் கூம்பு வடிவில் இருக்கும்,ஆனால் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவானது எரிமலைகள் இல்லாத தீவாக இருப்பதுடன், சம தளத் தீவாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த நிலையில் எதிர் புறம், வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் தனித் தனியாக மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்த பொழுது, இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருந்த இடைவெளியில், கரீபியன் தட்டு என்று வர்ணிக்கப் படும் கரீபியன் தீவுக் கூட்டமானது,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,நுழைந்து விட்டதாகவும்,தற்பொழுது கரீபியன் பாறைத் தட்டானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், பிண்டல் மற்றும் பாரட் என சில புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

ஆனால் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரண்டு கண்டங்களும் தற்பொழுது பனாமா நிலத் தொடர்பால் இணைக்கப் பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் எப்படி கரீபியன் தீவுக் கூட்டம் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.

அனால் கரீபியன் தீவுக் கூட்டமானது ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்த பொழுது, பனாமா நிலத் தொடர்பு உருவாகி இருக்க வில்லை என்றும்,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான், பனாமா நிலப் பகுதியானது கடலுக்கு அடியில் இருந்து மேல் நோக்கி உயர்ந்து உருவாகி, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பாலம் போல உருவாகியது என்றும்,அதன் பிறகு பனாமா நிலத் தொடர்பு வழியாக ,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் விலங்கினங்களின் போக்கு வரத்தும்  நடை பெற்றது என்றும், புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

ஆனால் டெக்சாஸ் பல்கலைக் கழகத்தின் தாவரவியல் துறையைச் சேர்ந்த டி டெலிவோர்யாஸ் மற்றும் லக்னோவில் உள்ள பீர்பால் சாஹினி தொல் தாவரவியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஷ்யாம் ஸ்ரீ வத்ஸ்சவா ஆகியோர் ஹோண்டுராஸ் நாட்டின் மத்தியப் பகுதியில் பதினாறு கோடி ஆண்டுகள் தொண்மையான தாவரங்களின் புதை படிவங்களைக் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

இதே போன்று 1985  ஆம் ஆண்டு ரிச்சி மற்றும் பின்ச் ஆகிய புவியியல் வல்லுனர்கள் ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள சான் சுவான்சிடோ பகுதியில் பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் வாழ்ந்து மடிந்த ஸ்டெபானோ செரஸ் என்று அழைக்கப் படும் அமோனிட்டிஸ் வகை கடல் ஒட்டுடலியின் புதை படிவங்களைக் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

எனவே பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் நிரூபணமாகிறது.

இதே போன்று, பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லி இடுப்பு வகை  டைனோசரின், முதுகெலும்பின் புதை படிவங்கள், கியூபா தீவின் மேற்குப் பகுதியில் உள்ள, சியரா டி ஆர்காநோஸ் மலைப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

குறிப்பாக கியூபா நாட்டின் தேசிய இயற்கை அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தொல்விலங்கியல் வல்லுனர்களான, மானுவேல் இல்டுரால்டி வின்சென்ட் மற்றும் ஜுல்மா காஸ்பரினி ஆகியோர், மேற்கொண்ட அகழ்வாய்வில் இந்தப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பாலம் போன்று இருந்திருப்பதும், அதன் வழியாக விலங்கினங்களின் போக்கு வரத்து நடை பெற்று இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

எனவே ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கரீபியன் தீவுக் கூட்டமானது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்ததாகவும்,தற்பொழுது கரீபியன் தீவுக் கூட்டமானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ,புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கம் சாத்தியம் இல்லாத விளக்கம்.

இது போன்ற பல ஆதாரங்கள் மற்றும் கண்டு பிடிப்புகள் மூலம் தற்பொழுது சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது,பசிபிக் கடல் பகுதியில் உருவாகி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்ததாகக் கூறப் படும் விளக்கத்தை ஏற்க மறுக்கின்றனர்.

இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்குப் பகுதியில் ,வடக்கு தெற்கு திசையை  நோக்கி உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் உருவானதற்கு,கரீபியன் பாறைத் தட்டானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் அட்லாண்டிக் கடல் தளமானது ,கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு அடியில்,சென்ற பிறகு,வெப்பத்தால் உருகி பாறைக் குழம்பாகி மேல் நோக்கி உயர்ந்து,கடல் தளத்தைப் பொத்துக் கொண்டு எரிமலைத் தொடராக உருவாகி இருக்கின்றன என்றும் புவியியலாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

இந்த நிலையில் வேறு சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது ,அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து இருக்கலாம் என்றும், தற்பொழுது கரீபியன் தீவுக் கூட்டமானது மேற்கு திசையை நோக்கி நகந்து கொண்டு இருக்கிறது என்றும், நம்புகின்றனர்.இந்தக் கருத்து 'அட்லாண்டிக் மாடல்' என்று அழைக்கப் படுகிறது.

ஆனால் பசிபிக் கடல் பகுதியில், கால பாகாஸ் தீவுக் கூட்டம் இருப்பதைப் போன்று இருப்பதைப் போன்று அட்லாண்டிக் கடல் பகுதியில் எரிமலைப் பிளம்புகள் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை,

ஆனால் கரீபியன் தீவுக் கூட்டம் உருவான பிறகு, அந்த எரிமலைப் பிளம்புகள் மறைந்து இருக்கலாம் என்றும் புவியியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.இந்தக் கருத்தை நம்பும் புவியியலாளர்களால் கரீபியன் தீவுக் கூடத்திற்கு கிழக்குப் பகுதியில் இருக்கும் எரிமலைத் தொடர்கள் எப்படி உருவாகின என்பதற்கு விளக்கம் கூற இயலவில்லை.

இன்னும் சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே (in situ model)  உருவாகி இருக்கலாம் என்றும் நம்புகின்றனர்.  

ஆனால் உண்மையில் கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எப்படி தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது?எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று புவியியல் வல்லுனர்களுக்குத் தெரிய வில்லை.

எனவே கரீபியன் தீவுக் கூட்டம் உண்மையில் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நேரிடையாகக் கூறினால்,பின்னர் அது தொடர்பாக எழும் கேள்விகளுக்கு, விளக்கமும் பதிலும் கூற வேண்டிய இக்கட்டான நிலை ஏற்படும் என்பதால், அதைத் தவிர்ப்பதற்காகவே,அமெரிக்க புவியியல் கழகத்தின் புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் பாறைத் தட்டானது,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொருத்த மட்டில் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று, சுற்றி வளைத்து விளக்கம் கூறி, தங்களின் அறியாமையை மூடி மறைக்கும் முயற்சியில் ஈடு பட்டு இருக்கின்றனர்.

உண்மையில் அமெரிக்கப் புவியியல் கழகத்தின் புவியியல் வல்லுனர்களுக்கு,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடைப் பட்ட கரீபியன் தீவுக் கடல் பகுதியில், என்ன நடக்கிறது என்று தெரியாது.

உண்மையில் கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே உருவாகி, எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது? என்ற கேள்விக்கு நேரிடையாக விளக்கம் கூறினால் மட்டுமே, ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் விளக்கம் கூறும் தகுதி, அமெரிக்கப் புவியியல் கழகத்தின் புவியியல் வல்லுனர்களுக்கு உண்டு.

அது வரையிலும் ஹைத்தி தீவு நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் விளக்கம் கூறும் தகுதி, அமெரிக்கப் புவியியல் கழகத்தின் புவியியல் வல்லுனர்களுக்கு இல்லை.

இந்த நிலையில், வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பது,உலக அளவில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட,நில அதிர்ச்சி வரை பட ஆதாரம் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன், முறையே மேற்கு மற்றும் வடமேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப்படுகிறது.

இவ்வாறு கண்டங்களானது கடல் தளங்களுடன் தனித் தனியாக  நகர்ந்து, அவற்றின் ஓரப்பகுதிகளுக்கு இடையில், உரசல் ஏற்படுவதால்தான் நிலஅதிர்ச்சிகள் ஏற்படுவதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

இந்த நிலையில்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில், உலகெங்கும் ஏற்பட்ட, 3,58,214   நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து,உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் ஒன்றையும், நாசா அமைப்பினர் தயாரித்து வெளியிட்டனர்.

அந்த உலக அளவிலான் நில அதிர்ச்சி வரை படத்தில் ,வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப்பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நிலஅதிர்ச்சிகள் பதிவாகி இருக்கவில்லை.

இதன் அடிப்படையில் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியை, வரையறுக்கப்  படாத எல்லைப் பகுதி-undefined boundary என்று புவியியல் வல்லுனர்கள் வர்ணிக்கின்றனர்.

இவ்வாறு உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப்பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நிலஅதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில் , வட  அமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதுடன், கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

எனவே  அண்டார்க்டிக்கா போன்ற தீவுக் கண்டங்களில் கூட டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, முன் ஒரு காலத்தில் எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும்,பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் தவறான விளக்கம் என்பதும் ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

எனவே அண்டார்க்டிக்கா போன்ற தீவுக் கண்டங்களில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததும்,கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்ததுமே காரணம் என்பதும் ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இந்த நிலையில் எரிமலைகளுக்குள் பாறைக் குழம்பு திரண்டு எரிமலையின் உயரம் அதிகரிப்பதாலும்,எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறிய பிறகு எரிமலையின் உயரம் குறைவைதாலும், எரிமலைகளைச் சுற்றியுள்ள தரைப் பகுதியானது உயர்ந்து இறங்கும் பொழுது , எரிமலையைச் சுற்றிலும் வளைய வடிவில் வரப்புகள் வெட்டியதைப் போன்ற மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, இணைய தளங்களில் வெளியிடப் பட்ட தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக அலாஸ்காவில் உள்ள ஆக்மோக் எரிமலையில் இருந்து 1945,1958 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் கரிய நிறத்தில் பாறைக் குழம்பானது வெளிப்பட்டது.

குறிப்பாக அந்த எரிமலையானது 1992-95 ஆண்டுகளில் 18 சென்டி மீட்டர் உயர்ந்தது.அதன் பின்னர் 1997 ஆம் ஆண்டில் சீறியதற்கு முன்பு 1995-96 ஆண்டில் 1-2 சென்டி மீட்டர் தாழ்வடைந்தது.அத்துடன் 1997 சீறியபொழுது 140 சென்டி மீட்டர் தாழ்வடைந்தது.

அதன் பிறகு 1997-ஆம் ஆண்டு முதல் 2003 வரை ஆண்டுக்கு 5 முதல் 15 சென்டி மீட்டர் வரை மறுபடியும் உயர்ந்து இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவானது.

இந்த நிலையில்,ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றி வரப்புகள் போன்ற மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருந்தது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படம் மூலம் தெரிய வந்துள்ளது. 

எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் ஹைத்தி தீவில் கடந்த 12.01.2010 அன்று, நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக