நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளுக்கும்
விளக்கம் கூறும் அளவுக்கு புவியியலாளர்களுக்கு அறிவு இல்லை.
தெற்காசிய சுனாமியை உருவாக்கிய சுமத்ரா தீவு நில
அதிர்ச்சி குறித்து ,கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில் என்ன
நடக்கிறது என்று தெரியாத நிலையிலேயே புவியியலாளர்கள் அடிப்படை ஆதாம் இன்றி,முன்னுக்குப்
பின் முரணான விளக்கங்களைத் தெரிவித்து இருப்பது ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
தெற்காசிய சுனாமி
குறித்து,அமெரிக்காவின் முன்னணி அறிவியல் ஆய்வு மையமான நாசா
கடந்த ,10.03.2005 அன்று ஒரு
அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், இந்தோனேசியாவுக்கு
அடியில், இந்தியக் கண்டமானது, கடல் தளத்துடன், உரசியபடி நகர்ந்து சென்றதால்தான் நில அதிர்ச்சியும்
சுனாமியும் ஏற்பட்டது என்று நாசாவைச் சேர்ந்த புவியியலாளர்கள் விளக்கம்
தெரிவித்தனர்.
ஆனால் மூன்று மாதத்திற்குப் பிறகு 27.04.2005 அன்று, அதே நாசா
வெளியிட்ட இன்னொரு அறிக்கையில், இந்தோனேசியாவுக்கு
அடியில், ஆஸ்திரேலியக் கண்டமானது, கடல் தளத்துடன், உரசியபடி
நகர்ந்து சென்றதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று, நாசாவைச்
சேர்ந்த புவியியலாளர்கள் முன்னுக்குப் பின் முரணாக விளக்கம் தெரிவித்து
இருக்கின்றனர்.
உண்மையில் நாசாவைச் சேர்ந்த புவியியலாளர்களுக்கு
இந்தோனேசியக் கடல் பகுதியில் என்ன நடக்கிறது என்றே தெரியாது.
குறிப்பாக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பத்து கோடி
ஆண்டுகளுக்கு முன்பு இணைந்த நிலையில்,தென் துருவப்
பகுதியில் ,அண்டார்க்டிக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகப்
புவியியலாளர்கள் நம்புகின்றனர்.
இதே போன்று தென் அமெரிக்கா,மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களும் ஒன்றாக இணைந்த
நிலையில் தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு
கோண்டுவாணா என்ற பெரிய கண்டமாக இருந்ததாகவும் நம்பப் படுகிறது.
அதன் பிறகு,பூமிக்கு அடியில்
இருந்த பாறைக் குழம்பானது வெப்பத்தால் இலேசாகி மேற்பகுதிக்கு வந்த பிறகு,குளிர்ந்து கணம் அதிகரித்ததால் மறுபடியும் பூமிக்குள்ளேயே
சென்றதாகவும் ,இவ்வாறு பூமிக்கு அடியில் பாறைக் குழம்பானது ஒரு
சக்கரம் போன்று சுழன்றதால்,கோண்டுவாணாக் கண்டமானது,தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய காண்டங்களாகப்
பிரிந்ததகவும் நம்பப் படுகிறது.
அதன் பிறகு,அண்டார்க்டிக்
கண்டத்தைச் சுற்றிலும்,பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு வந்த பாறைக்
குழம்பானது,குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவானதாக
நம்பப் படுகிறது.
இதே போன்று தொடர்ந்து நடை பெற்றதாகவும்,அதனால் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி தொடர்ந்து புதிய
கடல் தளம் உருவாகி வடக்கு மற்றும் தெற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி
நகர்ந்ததாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும்
தென்துருவப் பகுதியில் இருந்து வட பகுதியை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள
இடங்களுக்கு வந்து சேர்ந்ததாக நம்பப் படுகிறது.
தற்பொழுது இந்தியாவும்,ஆஸ்திரேலியாவும்
ஐயாயிரம் கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்து இருக்கிறது.
ஆரம்பத்தில் ஒன்றாக இருந்த இந்த இரண்டு கண்டங்களும், தற்பொழுது இருப்பது போன்று,ஐயாயிரம் கிலோ
மீட்டர் தொலைவுக்கு விலகி,கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருந்தால், இந்த இரண்டு கண்டங்களும் இரண்டு தனித் தனிக் கடல்
தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும்,
இந்த நிலையில் கண்டங்களானது கண்டங்களைச் சுற்றியுள்ள
கடல் தளங்களுடன் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல்
ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
இந்த விளக்கம் உண்மையென்றால்,இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் உள்ள கடல்
தரைப் பகுதியில், பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்குத் தொடர்ச்சியாக
நில அதிர்ச்சிகள்,அண்டார்க்டிக் கண்டம் வரைக்கும் ஏற்பட வேண்டும்.
இந்த நிலையில் ,நாசாவைச் சேர்ந்த
புவியியலாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல்,1998 ஆம் ஆண்டு வரையிலான, முப்பத்தி ஐந்து
ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் ஏற்பட்ட,3,58,214 நில அதிர்ச்சிகள்
ஏற்பட்ட இடங்களைக் குறித்து,உலக அளவிலான நில
அதிர்ச்சி வரை படம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டனர்.
அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப் பட்ட கடல் தரைப்
பகுதியில்,தொடர்ச்சியாகப் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு,அண்டார்க்டிக் கண்டம் வரை நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க
வில்லை.
இதன் மூலம் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும்
இடையில் உள்ள கடல் தரையானது ஒரே தொடர்ச்சியாக இருப்பதுடன்,கடல் தரையும், கண்டங்களும்
நிலையாக இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இந்த நிலையில், நாசாவைச் சேர்ந்த
புவியியலாளர்கள், கண்டத் தட்டுகளின் இயக்கத்தைக் குறிப்பதாகக் கூறப்
படும், ஒரு வரை படத்தையும் வெளியிட்டார்கள்.
அந்த வரை படத்தில்,இந்தியாவையும்,ஆஸ்திரேலியாவையும்,தனித் தனியாக
இரண்டு கடல் தளத்தின் மேல் இருப்பது போன்று,பிரித்துக்
காட்டாமல்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில்,சிறு சிறு கோடுகளை மட்டும் வரைந்து,கோடிட்ட பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய
வில்லை என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
இதன் மூலம்,கண்டங்களுக்கு
இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்றே உறுதியாகத் தெரியாத
நிலையிலேயே,இந்தியக் கண்டமானது கடல் தளத்துடன் நகர்ந்து
இந்தோனேசியாவுக்கு அடியில் சென்றதால்தான் நில அதிர்சியும் சுனாமியும் ஏற்பட்டதாக
முதலில் ஒரு தவறான விளக்கத்தைத் தெரிவித்து விட்டு, பின்னர் அந்த
விளக்கத்தை மறுக்கவோ நிராகரிக்கவோ செய்யாமல், ஆஸ்திரேலியாக்
கண்டமானது, கடல் தளத்துடன் இந்தோனேசியாவுக்கு
அடியில் ,நகர்ந்து சென்றதால்தான், நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாக, முன்னுக்குப் பின் முரணாக,அடிப்படை ஆதாரம்
இன்றி, ஒரு தவறான விளக்கத்தை, நாசாவைச் சேர்ந்த
புவியியலாளர்கள் தெரிவித்து இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இந்த நிலையில்,உலக அளவிலான நில அதிர்ச்சி வரை
படத்தில் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் நில
அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது,பதிவாகி இருக்கிறது.எனவே எரிமலைகள் வெடிப்பதாலேயே
நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது ஆதாரப் பூர்வமாக
நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று கண்டங்களுக்கு இடையில் இருக்கும்
கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று தெரியாத நிலையிலேயே அமெரிக்க நாட்டின்
புவியியலாளர்கள், ஹைத்தி தீவுப் பகுதியில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும்
சுனாமிக்கும் தவறான விளக்கம் கூறி இருப்பதும் ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏன் ஏற்பட்டது?
கடந்த 12.01.2010 ஆம் ஆண்டு,ஹைத்தி தீவில் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோரின்
உயிரிழப்புக்குக் காரணமான நில அதிர்ச்சி ஏற்பட்டதால் சிறிய அளவிலான சுனாமி
உருவானது.
அந்த நில அதிர்ச்சி ஏன் ஏற்பட்டது? என்பது குறித்து அமெரிக்க நாட்டின் புவியியல் கழகத்தைச்
சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டனர்.
அதில் ஹைத்தி தீவானது வட அமெரிக்கக் கண்டத்தைப்
பொறுத்த மட்டில் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததால், வட அமெரிக்கக்
கண்டம் மற்றும் ஹைத்தி தீவின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால் நில
அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப் பட்டு இருகிறது.
குறிப்பாக வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக்
கண்டமும், அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில், வடக்கு தெற்கு திசையை நோக்கி நீண்டு இருக்கும், கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி, முறையே மேற்கு மற்றும் வட மேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல்
தளங்களுடன், வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கியும்,தென் அமெரிக்கக் கண்டமானது,வட மேற்கு திசையை
நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
உண்மையில் இந்த இரண்டு கண்டங்களும் இவ்வாறு தனித்
தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருந்தால்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருந்து இந்த இரண்டு
கண்டங்களுக்கும் இடைப் பட்டா கடல் தரைப் பகுதியில் தொடங்கி, அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை, தொடர்ச்சியாகப் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு நில
அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
இந்த நிலையில் ,நாசாவைச் சேர்ந்த
புவியியலாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல்,1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் ஏற்பட்ட,3,58,214 நில அதிர்ச்சிகள்
ஏற்பட்ட இடங்களைக் குறித்து,உலக அளவிலான நில
அதிர்ச்சி வரை படம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டனர்.
ஆனால் நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை
படத்தில்,அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல்
தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இதன் அடிப்படையில் வட அமெரிக்கா மற்றும் தென்
அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் வரையறுக்கப் படாத எல்லைப்
பகுதி என்றும் குறிப்பிடப் படுகிறது.
இதன் மூலம் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட
கடல் தரைப் பகுதியானது,தனித் தனிப் பகுதிகளாக இல்லாமல்,ஒரே தொடர்ச்சியாக
இருப்பதும்,கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதாரப்
பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இந்த நிலையில் இந்த இரண்டு கண்டகளுக்கும் இடையில்
அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே எப்படி உருவாகி தற்பொழுது
இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தது? என்று புவியியலாளர்களுக்குத்
தெரிய விலை.
சில புவியியலாளர்கள்
கரீபியன் தீவுக் கூட்டமானது பசிபிக் கடல் பகுதியில்,கடல் தளத்துக்கு
அடியில் இருந்து ஒரு எரிமலைப் பிளம்பால் துளைக்கப் பட்டதால்,கடல் தளத்துக்கு மேலாக எரிமலைத் தீவுகளாக உருவாகிய பிறகு,அந்தத் தீவுக் கூட்டமே ஒரு தனிப் பாறைத் தட்டாக உருவாகிக்
கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,பசிபிக் கடல் தளத்துடன்,கிழக்கு திசையை
நோக்கி நகர்ந்து,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கா
மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் நுழைந்து தற்பொழுது உள்ள
இடத்திற்கு வந்து சேர்ந்ததாக நம்புகிறார்கள்.இந்த விளக்கம் 'பசிபிக் மாடல்' என்று அழைக்கப்
படுகிறது.
குறிப்பாக ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட
அமெரிக்காக் கண்டத்துக்கும் தென் அமெரிக்காக் கண்டத்துக்கும் இடையில் சிறிய
இடைவெளி இருந்ததாகவும் அந்த இடைவெளிக்குள் கரீபியன் தீவுக் கூட்டமானது வளைந்து
நுழைந்த பிறகு பெரிதானதாகவும் புவியியலாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
அத்துடன் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,வட அமெரிக்காக் கண்டதுக்கும் தென் அமெரிக்காக் கண்டதுக்கும்
இடையில் இருக்கும் மத்திய அமெரிக்க நிலப் பகுதி உருவாகி இருக்க வில்லை என்றும்,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான்,மத்திய அமெரிக்க நிலப் பகுதி உருவானதாகவும்,புவியியலாளர்கள் நம்புகின்றனர்.
கரீபியன் தீவுகள் நிலையாக இருக்கிறது ,புதை படிவ
ஆதாரங்கள்.
இந்த நிலையில், டெக்சாஸ்
பல்கலைக் கழகத்தின் தாவரவியல் துறையைச் சேர்ந்த, டி டெலிவோர்யாஸ்
மற்றும் லக்னோவில் உள்ள பீர்பால் சாஹினி தொல் தாவரவியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த, ஷ்யாம் ஸ்ரீ வத்ஸ்சவா ஆகியோர், ஹோண்டுராஸ் நாட்டின் மத்தியப் பகுதியில், பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதை
படிவங்களைக் கண்டு பிடித்தனர்.
இதே போன்று 1985 ஆம் ஆண்டு, ரிச்சி மற்றும் பின்ச் ஆகிய புவியியல் வல்லுனர்கள், ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள சான் சுவான்சிடோ பகுதியில், பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில்
வாழ்ந்து மடிந்த, ஸ்டெபானோ செரஸ் என்று அழைக்கப் படும், அமோனிட்டிஸ் வகைக் கடல் ஒட்டுடலியின் புதை படிவங்களைக்
கண்டு பிடித்தனர்.
எனவே பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே, மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது கடலுக்கு அடியில் இருந்து
கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பது, புதை படிவ
ஆதாரங்கள் மூலம் நிரூபணமாகிறது.
கியூபாவில் டைனோசர் புதை படிவங்கள்.
இதே போன்று டைனோசரின் புதை படிவ அதரங்கள் மூலமாகவும்
கரீபியன் தீவானது கடந்த பதினைந்து கோடி ஆண்டு காலமாக அமெரிக்கக் கண்டங்களுக்கு
இடையில் நிலையாக இருந்திருப்பதற்கு ஆதாரமாக, பதினைந்து கோடி
ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லி இடுப்பு வகை டைனோசரின், முதுகெலும்பின் புதை படிவங்கள், கியூபா தீவின் மேற்குப் பகுதியில் உள்ள, சியரா டி ஆர்காநோஸ் மலைப் பகுதியில் கண்டு பிடிக்கப்
பட்டுள்ளது.
கியூபா நாட்டின் தேசிய இயற்கை அருங்காட்சியகத்தைச்
சேர்ந்த தொல் விலங்கியல் வல்லுனர்களான, மானுவேல் இல்டுரால்டி
வின்சென்ட் மற்றும் ஜுல்மா காஸ்பரினி ஆகியோர், மேற்கொண்ட
அகழ்வாய்வில் இந்தப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் வட அமெரிக்கக் கண்டத்திற்கும், தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் உள்ள கரீபியன்
தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த கியூபாவில், பதினைந்து கோடி
ஆண்டுகளுக்கு முன்பே டைனோசர்கள் வாழ்ந்திருப்பது உறுதி செய்யப் பட்டள்ளது.
இது போன்ற பல ஆதாரங்கள் மற்றும் கண்டு பிடிப்புகள்
மூலம் தற்பொழுது சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக்
கூட்டமானது,பசிபிக் கடல் பகுதியில் உருவாகி கிழக்கு திசையை
நோக்கி நகர்ந்து வந்ததாகக் கூறப் படும் விளக்கத்தை ஏற்க மறுக்கின்றனர்.
அத்துடன் கரீபியன் தீவுக் கூட்டமானது,அட்லாண்டிக் கடல் பகுதியிலேயே உருவாகி மேற்கு திசையை நோக்கி
நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்து இருக்கலாம் என்றும்,கரீபியன் தீவுக் கூட்டமானது,மேற்கு திசையை
நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கலாம் என்றும் ஒரு புதிய கருத்தை முன்
மொழிந்திருக்கின்றனர்.இந்தக் கருத்து 'அட்லாண்டிக்
மாடல்' என்று அழைக்கப் படுகிறது.
இன்னும் சில புவியியல் வல்லுனர்கள் கரீபியன் தீவுக்
கூட்டமானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே (in situ model ) உருவாகி
இருக்கலாம் என்ற கருத்தையும் முன் மொழிந்திருக்கின்றனர்.இந்தக் கருத்து 'இன் சிட்டு' மாடல் என்று
அழைக்கப் படுகிறது.
ஆனால் இன்று வரை கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே
உருவாகி எப்படி தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்தது என்பது குறித்தும்
எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க்ரியது என்பது குறித்தும் புவியியல்
வல்லுனர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
முக்கியமாக எரிமலைச் செயல் பாட்டால் உருவாகும்
தீவுகள் கோபுரம் போன்று இருக்கும்,ஆனால் கரீபியன்
தீவுக் கூட்டத்தில் உள்ள பெரிய தீவான கியூபா தீவானது சமதளமாக இருப்பதுடன்
கியூபாவில் எரிமலைகளும் இல்லை.
இந்த நிலையில், கரீபியன் தீவுக்
கூட்டமானது, எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது? என்று நேரிடையாகக் கூறினால், பின்னர் அது
தொடர்பாக எழும் கேள்விகளுக்குப் பதில் விளக்கம் கூற வேண்டிய சிக்கலான நிலை
ஏற்படும்.
அதைத் தவிர்ப்பதற்காகவே, கரிபியன் தீவுக் கூட்டம் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து
கொண்டு இருக்கிறது? என்று நேரிடையாகக் குறிப்பிடாமல்,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில் கரீபியன் தீவுக்
கூட்டமானது, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் வட அமெரிக்கக் கண்டம் மற்றும் கரீபியன் தீவுப்
பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால், நில
அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாகவும், அமெரிக்க
நாட்டின் புவியியல் கழகத்தைச்(USGS ) சேர்ந்த
புவியியலாளர்கள் ஒரு மழுப்பலான விளக்கத்தைத் தெரிவித்து இருக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் அமெரிக்க நாட்டின் புவியியல்
கழகத்தைச் (USGS ) சேர்ந்த புவியியலாளர்களுக்கு நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட
கரீபியன் தீவுக் கடல் பகுதியில் என்ன நடக்கிறது என்று தெரிய வில்லை என்பதையே அவர்கள்
வெளியிட்ட அறிக்கை மூலமாக வெளிப்பட்டு இருக்கிறது.
எரிமலைகள் வெடித்ததால் நில அதிர்ச்சிகளும்
சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள்
படங்கள் மூலம் ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
தரை மட்ட மாறுபாடுகளை நுட்பமாகப் பதிவு செய்யும்
செயற்கைக் கோள் படங்கள் மூலமாகவும், பூமிக்கு அடியில்
எரிமலைகள் வெடித்ததால் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது தெரிய
வந்துள்ளது.
குறிப்பாக வட அமெரிக்காவில் உள்ள ஆரிகன் மாகாணத்தில் ‘மூன்று சகோதரிகள்’ என்று அழைக்கப்
படும் மூன்று எரிமலைகள் உருவாகி இருக்கின்றன.
அந்த எரிமலைப் பகுதியை எரிமலை இயல் வல்லுனர்கள், தரை மட்ட மாறுபாடுகளைத் துல்லியமாகப் பதிவு செய்யும்
செயற்கைக் கோள் மூலம் கண்காணித்து வந்தனர்.
குறிப்பாக அந்த எரிமலையின் மேல் செயற்கைக் கோள்
பறந்து செல்லும் பொழுது செயற்கைக் கோளில் இருந்து ரேடியோ கதிர்கள் தரையை நோக்கி
அனுப்பப் பட்டன.
அந்த ரேடியோ கதிர்கள் தரையில் உள்ள மேடு பள்ளங்களில்
பட்டு திரும்பவும் செயற்கைக் கோளை வந்தடைந்த பொழுது, செயற்கைக் கோளில்
இருந்த நுட்பமான கருவிகள் மூலம் தரையின் ஏற்றத் தாழ்வுகள் நீலம்,சிவப்பு,மஞ்சள் போன்ற
வண்ணங்களாக பதிவு செய்யப் பட்டது.
இதே போன்று மறுபடியும் அதே எரிமலைப் பகுதியின் மேல்
செயற்கைக் கோள் பறந்து சென்ற பொழுதும், ரேடியோ கதிர்கள்
மூலம் தரையின் மேடுபள்ளங்கள் பதிவு செய்யப் பட்டது.
இவ்வாறு ஒரு எரிமலைப் பகுதியின் மேல் வெவ்வேறு
காலத்தில் பறந்து சென்ற செயற்கைக் கோள் மூலம் பதிவு செய்யப் பட்ட தரை மட்ட மேடு
பள்ளப் பதிவுகளை, கணினி உதவியுடன் ஒரே படமாகத் தொகுக்கப் படும் பொழுது, இடைப் பட்ட காலத்தில் அந்த எரிமலைப் பகுதியில் ஏற்பட்ட
சிறிய அளவிலான மாற்றம் கூட பதிவாகிறது.
உதாரணமாக இந்த முறையில் ஒரு வயல் வெளியை
உழுதிருந்தால் கூட கண்டு பிடித்து விட முடியும்.
இதே முறையில் ஆரிகன் மாகாணத்தில் உள்ள எரிமலைப்
பகுதியின் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்து பார்த்த பொழுது அந்தப் பகுதியில்
அறுநூறு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தரையானது பத்து சென்டி மீட்டர் உயர்ந்து
இருப்பது தெரிய வந்தது.
‘ஆரிகன் புடைப்பு’ என்று அழைக்கப்
பட்ட அந்தப் பகுதிக்கு எரிமலை இயல் வல்லுனர்கள் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்ட
பிறகு, அப்பகுதியில் பூமிக்கு அடியில் ஏழு கிலோ மீட்டர்
ஆழத்தில் இருபதாயிரம் நீச்சல் குளத்தை நிரப்பும் அளவிற்கு பாறைக் குழம்பு திரண்டு
இருந்ததாகவும், அப்பகுதியில் பூமிக்கு அடியில் புதிதாக ஒரு எரிமலை
உருவாகிக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஒரே
மாதத்தில் அந்த புடைத்த பகுதியின் மத்தியப் பகுதியில் மட்டும் முன்னூற்றி
ஐம்பதுக்கும் அதிகமான முறை சிறிய அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதாலேயே நில
அதிர்ச்சிகள் ஏற்படுவது ஆதார பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதாலேயே நில
அதிர்ச்சிகள் ஏற்படுவது ஆதார பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
எரிமலைகளைச் சுற்றி உருவான மேடு பள்ள வளையங்கள்
மியாமி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜூலியட்
பிக் என்ற எரிமலை இயல் வல்லுநர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர், தரை மட்ட மாறுபாடுகளை ரேடியோ கதிர் வீச்சு முறையில் பதிவு
செய்யும் செயற்கைக் கோள் மூலம், ஆப்பிரிக்காவின்
கிழக்குப் பகுதியில் உள்ள நான்கு எரிமலைகளை ஆய்வு செய்த பொழுது,அந்த எரிமலைகளைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில
சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தெரிய
வந்தது.
இவ்வாறு எரிமலையைச் சுற்றியுள்ள தரையில் வளைய வடிவில்
மேடு பள்ளங்கள் உருவாகுவதற்கு, அந்த எரிமலையானது
உயர்ந்து இறங்குவதே காரணமே என்று டாக்டர் ஜூலியட் பிக் தெரிவித்து இருக்கிறார்.
குறிப்பாக ஒரு எரிமலைக்கு அடியில் பாறைக் குழம்பு
திரண்டு அந்த எரிமலை உயரும் பொழுது எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும்
எரிமலையுடன் சில சென்டி மீட்டர் உயர்கிறது.
இதே போன்று அந்த எரிமலையில் இருந்து வாயுக்களும்
நீராவியும் வெளியேறி எரிமலையின் உயரம் மறுபடியும் இறங்கும் பொழுது எரிமலையுடன்
வட்ட வடிவில் உயர்ந்த தரைப் பகுதியானது, மறுபடியும்
தாழ்வடையும் பொழுது எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியானது உயர்ந்து
இறங்கியதற்கு அடையாளமாக வடுக்கள் போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகின்றன.
இந்த நிலையில் கடந்த 2009 ஆண்டு இத்தாலி
நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள லா அகுய்லா என்ற நகரில் கடுமையான நில அதிர்ச்சி
ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர்
சுற்றளவிற்கு எரிமலைகளைச் சுற்றி உருவாகுவதைப் போலவே சில சென்டி மீட்டர் உயரமும்
தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள்
படங்களில் பதிவானது.
அது மட்டுமல்லாது அந்த நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு
ஒரு வாரத்திற்கு முன்பே அப்பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து ரேடான் என்று
அழைக்கப் படும் கதிர் வீச்சுத் தன்மை உடைய வாயு வெளிப் பட்டு இருந்ததை நில
அதிர்ச்சி ஏற்படுவதை முன் கூட்டியே கணிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஒரு
ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்து இருக்கிறார்.
முக்கியமாக ரேடான் வாயுவானது எரிமலைகளில் இருந்து
வெளிப்படும் வாயுவாகும்.
எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே இத்தாலி
நாட்டில் லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது ஆதார பூர்வமாக
நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று கடந்த 11.03.2011
அன்று ஜப்பானின் ஹோண்சு தீவுக்கு அருகில், கடலுக்கு அடியில் ஏற்பட்ட நில அதிர்ச்சியால் சுனாமி
ஏற்பட்டது.
அப்பொழுது ஹோண்சு தீவில் நில அதிர்ச்சி மையத்தைச்
சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும்
உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்தது,தரை மட்ட
மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.
அது மட்டுமல்லாது அந்த நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு
மூன்று நாட்களுக்கு முன்பு ஹோண்சு தீவின் வளி மண்டல மேலடுக்கின் வெப்ப நிலையானது
அசாதாரணாமாக உயர்ந்து இருந்ததும் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.
இதற்கு அப்பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து கசிந்த
கதிரியக்கத் தன்மை உடைய ரேடான் வாயு காரணமாக இருக்கலாம் என்று வல்லுனர்கள்
தெரிவித்து இருகின்றனர்.
குறிப்பாக ரேடான் வாயுவின் கதிர் வீச்சின் காரணமாக
காற்றில் இருந்த மூலக் கூறுகளில் இருந்து எலெக்ட்ரான்கள் வெளியேற்றப் பட்டதால்
அந்த எலெக்ட்ரான்கள் திரண்டு எலெக்ட்ரான் மேகம் உருவாகி இருக்கலாம் என்றும், இந்த வினையானது ஒரு வெப்பம் உமிழும் வினை என்பதால் வளி மண்டல
மேலடுக்கின் வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்திருக்கலாம் என்றும் வல்லுனர்கள்
விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
மேலும் நில அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு ஹோண்சு தீவின்
வளி மண்டல மேலடுக்கின் வெப்ப நிலையானது மறுபடியும் சாதாரண நிலைக்கு திரும்பி
விட்டதும் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே ஹோண்சு
தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பதும் ஆதாரபூர்வமாக
நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று கடந்த 12.01.2010
அன்று ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட
பொழுதும், ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல
கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள
வளையங்கள் உருவாகி இருந்ததும் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள்
படங்களில் பதிவாகியுள்ளது.
அது மட்டுமல்லாது அந்த நில அதிர்சிக்குப் பிறகு
ஹைத்தி தீவின் கடற் கரையானது கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருந்தது.அதனால்
அப்பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கி இருந்த கடல் தாவரங்கள் வெளியில் தெரிந்தது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்து உயர்ந்ததாலேயே
ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது ஆதார பூர்வமாக
நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று கடந்த 26.12.2004 அன்று,இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில் கடலுக்கு அடியில்
ஏற்பட்ட நில அதிர்ச்சியால் சுனாமி உருவானது.
அந்த நில அதிர்சிக்குப் பிறகு சுமத்ரா தீவுக்கு
அருகில் இருந்த சிமிழு என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது கடல் மட்டத்தில்
இருந்து நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது.
அதனால் அப்பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கிக்
கிடந்த கடல் தாவரங்கள் வெளியில் தெரிந்தன.
இந்த நிலையில் அதே சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் 20.02.2008 அன்று கடுமையான நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் நில அதிர்ச்சி மையத்தைச்
சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஐம்பத்தி ஒன்பது சென்டி மீட்டர் உயரமும்
தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்திருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள்
படங்களில் பதிவாகி இருந்தது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே
தெற்காசிய சுனாமி உருவாகி இருப்பது ஆதார பூர்வமாக நிரூபனமாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக