வியாழன், 22 ஜூன், 2017

கிரகங்கள் எவ்வாறு உருவாகுகின்றன?

நட்சத்திரங்கள் எப்படி உருவாகுகின்றன என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு இடையே, ஒருமித்த கருத்து நிலவுகிறது. 

ஆனால், கிரகங்கள் எவ்வாறு உருவாகுகின்றன என்பது குறித்து, இன்றளவும் ஆராய்ச்சியாளர்களுக்கு இடையில், பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது.

குறிப்பாக ,விண் வெளியில்,இருக்கும் ராட்சத விண் மேகங்களானது,ஈர்ப்பு விசையால், சுருங்கியதால்,நட்சத்திரங்கள் உருவானதாக நம்பப் படுகிறது.

இந்தக் கருத்தானது நெபுலா கொள்கைஎன்று அழைக்கப் படுகிறது.

இந்தக் கருத்தை முதன் முதலாக கூறியவர்,ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் ஸ்வீடன் பர்க். அதன் பிறகு, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் கான்ட் 1755 ஆம் ஆண்டு இந்தக் கருத்தை விரிவாக்கினார்.

குறிப்பாக நட்சத்திரங்களானது, கூட்டமாக உருவாகுவதாக நம்பப் படுகிறது.

அதன் படி, விண்வெளியில் இருந்த ஒரு ராட்சத விண்மேகங்களானது, தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது, சூரியனாகவும்,அதனைச் சுற்றி சுழன்று கொண்டு இருந்த,தோசை போன்ற தட்டையான பகுதிகளில் இருந்த, தூசிகளும் வாயுக்களும், ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,கிரகங்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது.

குறிப்பாக, சூரியனுக்கு அருகில் அதீத வெப்ப நிலை நிலவியதாகவும், அதனால்,சூரியனுக்கு அருகில்,குறைந்த அளவிலேயே வாயுக்களும்,தூசிகளும் இருந்ததாகவும்,அந்தத் தூசிகளும் வாயுக்களும், மெதுவாக உருண்டு திரண்டு,பூமி செவ்வாய் போன்ற சிறிய அளவிலான பாறைக் கிரகங்களானது, நீண்ட கால கட்டத்தில் , உருவானதாக நம்பப் படுகிறது.

இந்த முறையானது,திரளுதல் ( accretion method) என்று அழைக்கப் படுகிறது.இந்த முறையில், கிரகங்கள் உருவாக நீண்ட காலம் தேவைப் படுவதால்,இந்த முறையானது ஆமை முறை என்றும் அழைக்கப் படுகிறது.

அதாவது,தூசிகள் திரண்டு கூழாங் கற்களாகவும், கூழாங் கற்கள் திரண்டு பாறைகளாகவும்,பாறைகள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறிய பிறகு, மறுபடியும் திரண்டு பெரிய மலைகளாகவும்,அதே போன்று மலைகள் சேர்ந்து, சிறிய கிரகங்களாகவும்,பின்னர் சிறிய கிரகங்கள் சேர்ந்து, பூமி போன்ற பாறைக் கிரகங்களாகவும், உருவானதாக நம்பப் படுகிறது.

அத்துடன்,சூரியனுக்கு அருகில் அதிக வெப்ப நிலை இருந்ததாகவும்,அதனால் அந்தப் பகுதியில் இருந்த எளிதில் ஆவியாகக் கூடிய, ஹைட்ரஜன்,சோடியம் குளோரின், மீத்தேன் அம்மோனியா போன்ற வாயுக்களானது,சூரியனில் இருந்து அதிக தொலைவுக்கு,சூரியக் கதிர் வீச்சால் கொண்டு செல்லப் பட்டதாக நம்பப் படுகிறது.

அதன் பின்னர், இது போன்ற இலேசான வாயுக்களானது,சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில் திரண்டதால்,வியாழன் போன்ற ராட்சத வாயுக் கோள கிரகங்களானது, உருவானதாக நம்பப் படுகிறது.

குறிப்பாக திரளுதல் முறையில் உருவான பாறைக் கிரகங்களானது,அந்தப் பகுதியில் இருந்த வாயுக்களைக் கவர்ந்ததால், வியாழன் போன்ற ராட்சத வாயுக் கோள கிரகங்களானது, உருவானதாக நம்பப் படுகிறது.

மேலும், ராட்சத வாயுக் கோள கிரகங்கள் உருவான பொழுது,அந்தக் கிரகங்களைச் சுற்றிச் சுழன்ற, தூசிகள் மற்றும் வாயுக்கள் திரண்டதால்,அந்தக் கிரகங்களைச் சுற்றி,நிலாக்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது.

இந்த முறையில், கிரகங்களானது, ஒரு கோடி முதல், பத்து கோடி ஆண்டு காலத்தில், உருவாகுவதாக நம்பப் படுகிறது.

ஆனால், அவ்வளவு காலம், நட்சத்திரங்களைச் சுற்றி, தூசிகள் மற்றும் வாயுக்கள், இருப்பதற்கு சாத்தியம் இல்லை, என்பது தெரிய வந்தது.

அத்துடன்,இந்தக் கருத்தானது, நமது சூரிய மண்டலத்தை, மாதிரியாக வைத்து உருவாக்கப் பட்டது.

இந்தக் கருத்து உருவாக்கப் பட்ட பொழுது,விண்வெளியில் வேற்று கிரகங்கள் கண்டு பிடிக்கப் பட வில்லை.

கடந்த 1992,ஆம் ஆண்டுதான், முதல் வேற்று கிரகம் கண்டு பிடிக்கப் பட்டது.

அதன் பிறகு,மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளில் மூவாயிரத்துக்கும் அதிகமான வேற்று கிரகங்கள் கண்டு பிடிக்கப் பட்டன.

தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வில்,நட்சத்திரங்களை விட அதிக அளவில் கிரகங்கள் இருப்பது தெரிய வந்தது.

குறிப்பாக, வியாழன் போன்ற ராட்சத வாயுக் கோளங்கள், விண்வெளியில் அதிக அளவில் இருப்பதும் தெரிய வந்தது.

எனவே,விண்வெளியில் கிரகங்களானது, அடிக்கடி நடை பெறக் கூடிய செயல் மூலம், மிகவும் வேகமான முறையில் உருவாக வேண்டும் என்றும் கருதப் பட்டது.

அதன் அடிப்படையில்,வியாழன் போன்ற, ராட்சத வாயுக் கோளங்களானது, நட்சத்திரங்களைச் சுற்றி இருக்கும் தூசி மேகங்களில்,ஆங்காங்கே ஈர்ப்பு விசை சம நிலை குலைந்து,திடீரென்று சுருங்குவதால் உருவாகலாம், என்று கருதப் பட்டது.

இந்த முறையானது,’தூசித் தட்டு சீர் குலைவு’ (disk instability )என்று, இந்த முறையில், சில லட்சம் ஆண்டுகளில் கிரகங்கள் உருவாகலாம், என்று நம்பப் படுகிறது.எனவே இந்த முறையானது, முயல் முறை என்றும் அழைக்கப் படுகிறது.

இந்த நிலையில், நான் மேற்கொண்ட ஆய்வில்,நட்சத்திரங்களுக்கு
 உள்ளேயே கிரகங்கள் உருவாகுவது தெரிய வந்தது.

குறிப்பாக, நட்சத்திரங்களுக்கு உள்ளே கிரகங்கள் உருவான பிறகு,அந்த நட்சத்திரத்தின் வாயுப் பகுதிகள் ஆவியாக்கப் படும் பொழுது, எஞ்சிய மையக் கோளமானது, கிரகமாக வெளிவந்து, அருகில் இருக்கும் நட்சத்திரங்களை வலம் வரத் தொடங்குகிறது.

அதாவது,ஒரு நட்சத்திரத்தை, அருகில் இருக்கும் நட்சத்திரம் இழுக்கும் பொழுது,இழுக்கப் பட்ட நட்சத்திரமானது,இழுத்த நட்சத்திரத்தை வலம் வரத் தொடங்குகிறது.

அதனால், இழுக்கப் பட்ட நட்சத்திரத்தின் வாயுப் பொருட்களானது,ஆவியாக்கப் படுவதுடன்,இழுக்கப் பட்ட நட்சத்திரத்தை சுற்றிலும், தூசி மற்றும் வாயு மண்டலமாக சுற்றத் தொடங்குகிறது.

இவ்வாறு,விண்வெளியில், வாயு மற்றும் தூசி மண்டலத்தால் சூழப் பட்டு இருக்கும் நட்சத்திரங்களைப் பற்றி, தற்பொழுது தவறான கருத்து நிலவுகிறது.

அதாவது,விண்மேகமானது தட்டையாகச் சுருங்கிச் சுழன்ற பொழுது, மத்தியில் இருந்த பருத்த பகுதியானது நட்சத்திரமாகவும்,அதனைத் சுற்றி இருந்த தோசை போன்ற வடிவில் இருந்த , தூசி மற்றும் வாயுக்களானது, ஆங்காங்கே திரளுவதால்தான்,நட்சத்திரங்களைச் சுற்றி கிரகங்கள் உருவாகுவதாக நம்பப் படுகிறது.

அதன் அடிப்படையில், அந்த தூசித் தட்டு வளையங்களானது,கிரகங்கள் திரளும் தட்டு ( accretion disk ) என்றும் அழைக்கப் படுகிறது.

ஆனால், உண்மையில் அந்தத் தூசித் தட்டு வளையங்களானது, ஆவியாக்கப் படும் நட்சத்திரங்களால், உருவாக்கப் படுவது ஆகும்.

எனது கருத்துக்கு, சில ஆதாரங்கள்.

உதாரணமாக, தூசித் தட்டுக் கருத்தின் படி ,புதிதாக உருவாகிக் கொண்டு இருக்கும், இளவயது நட்சத்திரங்களைச் சுற்றியே,தூசிகள் மற்றும் வாயுக்களால் ஆன தூசித் தட்டு வளையம் இருக்க வேண்டும்.

ஆனால்,விண்வெளியில்,இள வயது மற்றும் நமது சூரியன் போன்ற நடுத் தர வயது நட்சத்திரங்களைச் சுற்றி மட்டுமின்றி, இறுதிக் காலத்தில் இருக்கும் நட்சத்திரங்களைச் சுற்றியும், தூசிகள் மற்றும் வாயுக்களால் ஆன,தூசித் தட்டு வளையங்கள் காணப் படுகின்றன.

உதாரணமாக,பூமியில் இருந்து, நாலாயிரம் ஒளியாண்டு தொலைவில், IRAS 08544-4431 என்று அழைக்கப் படும், இரட்டை நட்சத்திரம் இருக்கிறது.அதில், ஒரு நட்சத்திரமானது 'சிவப்பு ராட்சதன்' என்று அழைக்கப் படும் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. அந்த நட்சத்திரத்தில் இருந்து வாயுக்கள் வெளித் தள்ளப் பட்டுக் கொண்டு இருக்கிறது.

அதன் அருகில் புதிதாக உருவான, நட்சத்திரம் ஒன்றும் இருக்கிறது.

இந்த நிலையில்,சிவப்பு நட்சத்திரத்தால் வெளித் தள்ளப் பட்ட வாயு நட்சத்திரத்தை சுற்றி இருக்கும் தூசித் தட்டு வளையத்தை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள்,அந்தத் தூசித் தட்டானது, இளவயது நட்சத்திரங்களைச் சுற்றி இருக்கும்,தூசித் தட்டைப் போலவே இருப்பதாகத் தெரிவித்து
 இருக்கிறார்கள்.
அதாவது, நமது சூரியன் போன்ற நட்சத்திரங்களில் அணுக் கரு வினையானது நின்று விடும் பொழுது,விரிவடைந்து சிவப்பு நிறமாக உருவாகும்.பின்னர் அதில் இருந்து வாயுக்கள் வெளியேறும்.

சில சமயம், ஒரு சிவப்பு நட்சத்திரத்தில் இருந்து வெளியேறும் வாயுக்களானது, அதன் அருகில் இருக்கும் துணை நட்சதிரத்தாலும் ஈர்க்கப் பட்டு,அந்த துணை நட்சத்திரத்தைச் சுற்றிலும் வளையங்களாக உருவாகும்.

இது போன்ற வளையங்களில் இருந்துதான் கிரகங்கள் உருவாகுவதாக நம்புவதால், இந்த வளையங்களை,கிரகங்கள் திரளும் தட்டு ( accretion disk ) என்று ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர்.

உண்மையில்,நட்சத்திரங்களைச்
 சுற்றி இருக்கும் தூசி மற்றும் வாயுக்களால் ஆன தட்டு வளையங்களானது, ஆவியாக்கப் படும் நட்சத்திரங்களால் உருவாகுகின்றன.

இதே போன்று, என்சிலாடஸ் என்று அழைக்கப் படும்,சனி கிரகத்தின் துணைக் கோளில் இருந்து, வெளியேற்றப் படும் நீராவியானது,சனிக் கிரகத்தைச் சுற்றி இருக்கும், வளையங்களால் சேகரிக்கப் படுவதும்,காசினி செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

பிளேனட்டரி நெபுலா (planetary nebula)

பன்னெடுங் காலமாகவே, நம் பூமி உள்பட ஏனைய கிரகங்கள் எப்படித் தோன்றின, என்ற கேள்வி ஆராய்ச்சியாளர்களை ரொம்பவே குழப்பிக் கொண்டு இருந்தது.

இந்த நிலையில்,இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு,யுரேனஸ் கிரகத்தைக் கண்டு பிடித்த, வில்லியம் ஹெர்சல் என்ற ஆராய்ச்சியாளர்,வானத்தை ஆராய்ந்து கொண்டு இருந்த பொழுது,சிறிய புகை மண்டலத்துக்கு நடுவில்,ஒரு சிறிய ஒளிப் புள்ளி இருப்பதைக் கண்டார்.

அந்தப் பொருளானது, யுரேனஸ் போலவே, நீல நிறத்தில் இருந்ததால் அதனை ஒரு கிரகமாகக் கருதினார்.

அதன் அடிப்படையில்,அதற்கு 'கிரக மேகம்' என்ற பொருளைத் தரும் பதமான, 'பிளேனட்டரி நெபுலா' என்ற பெயரைச் சூட்டினார்.

ஆனால், அந்தப் பெயரானது ஒரு தவறான பெயர் ( misnomer ) என்று கருதப் பட்டது.ஏனென்றால் உண்மையில் அது போன்ற அமைப்புக்கும், கிரகத்துக்கும், தொடர்பு இல்லை என்று கருதப் பட்டது.

குறிப்பாக, அது போன்ற மேகங்களானது,ஒரு நட்சத்திரத்தின் கடைசி கால கட்டத்தில்,அதாவது ஒரு நட்சத்திரத்தில் அணுக் கரு வினைகள் முடிந்த நிலையில், நட்சத்திரங்களைச் சுற்றி இருக்கும் வாயு மண்டல அடுக்குகளானது, விரிவடைவதால் உருவாகும் அமைப்பு, என்று புரிந்து கொண்டார்கள்.

குறிப்பாக, இது போன்ற வாயு மண்டலங்களானது, சில ஆயிரம் ஆண்டு காலமாகவே நிலைத்து இருப்பதும் தெரிய வந்தது.

அதன் காரணமாக இது போன்ற கிரக நெபுலாக்களானது,மிகவும் குறைந்த எண்ணிக்கையில் காணப் படுகின்றன.குறிப்பாக நமது பால் வீதி நட்சத்திர மண்டலத்தில்,1500 கிரக நெபுலாக்களே காணப் படுகின்றன.

இந்த நிலையில், தற்பொழுது,மிரா என்று அழைக்கப் படும், ஒரு சிவப்பு ராட்சத நட்சத்திரத்தைச் சுற்றிலும், இதே போன்ற அமைப்பு இருப்பது,நவீன தொலை நோக்கி மூலம் ஆய்வு செய்ததன் அடிப்படையில் தெரிய வந்தது.

குறிப்பாக, பூமியில் இருந்து நானூறு ஒளியாண்டு தொலைவில் இருக்கும், மிரா நட்சத்திரமானது ,வெறுங் கண்ணால் காணக் கூடிய நட்சத்திரம் என்பதால், பல நூறு ஆண்டு காலமாகவே, இந்த நட்சத்திரத்தைப் பல ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி செய்தனர்.

அணுக்கரு வினை முடியும்,இறுதிக் கால கட்டத்தில் இருக்கும், இந்த நட்சத்திரத்தின் பிரகாசமானது,எண்பது முதல் ஆயிரம் நாளுக்கு ஒரு முறை அதிகரித்த பிறகு மங்குகிறது.பிறகு மறுபடியும் பிரகாசமடைகிறது.

எனவே, இவ்வகை நட்சத்திரங்களானது ஒளி வேறுபாடு அடையும்நட்சத்திரங்கள் என்றும் அழைக்கப் படுகிறது.

இதே போன்று, பிரகாசம் மாறக் கூடிய, முப்பதாயிரத்துக்கும் அதிகமான நட்சத்திரங்கள், நமது பால்வீதி நட்சத்திர மண்டலத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 2007 , ஆம் ஆண்டு, மிரா நட்சத்திரத்தை, புற ஊதா தொலைக் காட்சியில் பார்த்த பொழுது,அந்த நட்சத்திரத்துக்கு பதின் மூன்று ஒளியாண்டு நீளமுள்ள வால் இருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, சூரியனில் இருந்து புளூட்டோ கிரகம் இருக்கும் தொலைவைக் காட்டிலும்,இருபதாயிரம் மடங்கு தொலைவு ஆகும்.

அத்துடன், அந்த நட்சத்திரமானது,தலை தெறிக்கும் வேகத்தில் அதாவது,வினாடிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில்,( வினாடிக்கு எண்பது மைல் ) பயணம் செய்து கொண்டு இருப்பதும் தெரிய வந்தது.

இவ்வாறு, அந்த நட்சத்திரமானது, அசுர வேகத்தில் விண்வெளியில் பயணம் செய்து கொண்டு இருப்பதால், அந்த நட்சத்திரத்தின் தலைப் பகுதிக்கு முன்னே,தொப்பி போன்ற அமைப்பு உருவாகி இருக்கிறது.

அதாவது, நீரைக் கிழித்தவாறு செல்லும் படகுக்கு முன்பு, வில் போன்ற வளைவு உருவாகுவதைப் போன்று,மிரா நட்சத்திரத்துக்கு முன்பும் ஒரு வில் போன்ற வளைவு, உருவாகி இருக்கிறது.

அந்த வில் வளைவானது 'போ ஷாக் 'என்று அழைக்கப் படுகிறது.

மிரா நட்சத்திரத்தின் தலைப் பகுதியில் இருந்து,ஒவ்வொரு ஆண்டும்,பூமியின் அளவுள்ள சூடான வாயுக்களும் வெளியேறிக் கொண்டு இருக்கிறது.

குறிப்பாக,மிரா நட்சத்திரத்தின் வாலானது, முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருப்பதாகக் கணிக்கப் பட்டு இருக்கிறது.

மிரா நட்சத்திரத்துக்கு,அருகில் ஒரு துணை நட்சத்திரமும் இருக்கிறது.

மிரா-பி,என்று அழைக்கப் படும் அந்த நட்சத்திரமானது,ஒரு நட்சத்திரம் வெடித்த பிறகு, உருவாகக் கூடிய, வெண்குறு நட்சத்திரம் என்பதும் தெரிய வந்துள்ளது.

அத்துடன், அந்த துணை நட்சத்திரமானது,மிரா நட்சத்திரத்தில் இருந்து,நூறு விண்வெளி அலகு தொலைவில் இருக்கிறது.

ஒரு விண்வெளி அலகு என்பது, சூரியனில் இருந்து பூமி இருக்கும் தொலைவு ஆகும்,அதாவது பதினைந்து கோடி கிலோ மீட்டர் ஆகும்.

மிரா நட்சத்திரத்தில் இருந்து வெளியேறும் வாயுக்களில் ஒரு சதவீதம்,மிரா நட்சத்திரத்தின் துணை நட்சத்திரத்தின் ஈர்ப்பு சக்தியால் கவர்ந்து கொள்ளப் படுகிறது.

அத்துடன், அந்த வாயு மற்றும் தூசிப் பொருட்களானது,மிரா நட்சத்திரத்தின் துணை நட்சத்திரத்தைச் சுற்றிலும் வளையங்களைப் போன்று சுற்றி இருக்கிறது.

குறிப்பாக, அந்த வளையத்தில் இருக்கும் தூசி மற்றும் வாயுக்களானது, பூமியின் அளவில் இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு, ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி தூசி மற்றும் வாயுக்களால் ஆன வளையமானது புரோட்டோ பிளேனட்டரி டிஸ்க்அதாவது கிரகங்களை உருவாக்கும் தட்டு என்றும் அழைக்கப் படுகிறது.

ஏனென்றால், இது போன்ற நட்சத்திரத்தைச் சுற்றி இருக்கும் வளையங்களில் இருக்கும் தூசிகள் மற்றும் வாயுக்கள் திரண்டுதான் கிரகங்கள் உருவாகுகின்றன என்று நம்பப் படுகிறது.

அதன் அடிப்படியில் அந்த வளையங்களானது, திரளும் தட்டு ( accretion disk ) என்று அழைக்கப் படுகிறது.

உண்மையில்,நட்சத்திரங்களைச்
 சுற்றி இருக்கும் தூசி மற்றும் வாயுக்களால் ஆன,தூசித் தட்டு வளையங்களானது,ஆவியாக்கப் படும் நட்சத்திரங்களால் உருவாகுகின்றன.என்பது IRAS 08544-4431 என்று அழைக்கப் படும் இரட்டை நட்சத்திர அமைப்பு மூலம் ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.

தூசித் தட்டுக் கருத்தின் படி,ஒரு நட்சத்திரம் அல்லது கிரகத்தைச் சுற்றி சுழன்று கொண்டு இருக்கும் தூசித் தட்டானது,அந்த நட்சத்திரம் அல்லது கிரகம் சுழன்று கொண்டு இருக்கும் திசைக்கு இணையாக இருக்க வேண்டும்.

இந்த நிலையில்,பூமியில் இருந்து 434 ஒளியாண்டு தொலைவில் இருக்கும்,J 1407,என்று அழைக்கப் படும் கிரகத்தைச் சுற்றி இருக்கும் வளையங்களானது,அந்தக் கிரகம் சுற்றிக் கொண்டு இருக்கும் திசைக்கு, எதிர் திசையில் சுற்றிக் கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
000000000000000
பூமிக்கு நீர், நைட்ரஜன் மற்றும் அம்மோனியா எப்படி வந்தது?
தற்பொழுது ஏற்றுக் கொள்ளப் பட்ட கருத்தின் படி,முன் ஒரு காலத்தில்,விண் வெளியில்,இருந்த ராட்சத விண் மேகங்களானது,ஈர்ப்பு விசையால், தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,சுற்றி இருந்த தட்டையான பகுதிகளில் இருந்த தூசிகளும் வாயுக்களும், ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,கிரகங்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது.

குறிப்பாக, சூரியனுக்கு அருகில் அதீத வெப்ப நிலை நிலவியதாகவும், அதனால்,சூரியனுக்கு அருகில்,குறைந்த அளவிலேயே வாயுக்களும்,தூசிகளும் இருந்ததாகவும்,அந்தத் தூசிகளும் வாயுக்களும், மெதுவாக உருண்டு திரண்டு,பூமி செவ்வாய் போன்ற சிறிய அளவிலான பாறைக் கிரகங்கள், நீண்ட காலத்தில், உருவானதாக நம்பப் படுகிறது.

அத்துடன்,சூரியனுக்கு அருகில் அதிக வெப்ப நிலை இருந்ததாகவும்,அதனால் அந்தப் பகுதியில் இருந்த எளிதில் ஆவியாகக் கூடிய, ஹைட்ரஜன்,சோடியம் குளோரின்,மீத்தேன் அம்மோனியா போன்ற வாயுக்களானது,சூரியனில் இருந்து அதிக தொலைவுக்கு,சூரியக் கதிர் வீச்சால் கொண்டு செல்லப் பட்டதாக நம்பப் படுகிறது.

அதன் பின்னர், இது போன்ற இலேசான வாயுக்களானது,சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில் திரண்டதால்,வியாழன் போன்ற ராட்சத வாயுக் கோள கிரகங்களானது, உருவானதாக நம்பப் படுகிறது.

பாறைக் கிரகங்களுக்கும் வாயுக் கோள கிரகங்களுக்கும் இடையில் இருக்கும் பகுதியானது,உறை நிலைப் பகுதி,(snow line ) என்று வரையறை செய்யப் படுகிறது.

ஏனென்றால், இந்தப் பகுதியில்தான், நீராவி போன்ற எளிதில் ஆவியாகும் வாயுக்களானது, வெப்பக் குறைபாட்டால் உறை நிலையை அடைகிறது.

அத்துடன், புளுட்டோவுக்கும் அப்பால், இருக்கும் பகுதியானது மீத்தேன் அம்மோனியா போன்ற வாயுக்களானது உறையும் பகுதி என்று வரையறுக்கப் படுகிறது.

இந்தப் பகுதியில்தான், வால் நட்சத்திரங்கள் உருவாகுவதாக நம்பப் படுகிறது.

ஆனால் இந்தக் கருத்தானது, ஒரு தவாறான கருத்து, என்பது, கிரகங்களில் காணப் படும், எளிதில் ஆவியாகக் கூடிய வாயுக்கள்,மற்றும் வேதிப் பொருட்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

உதாரணமாக ,செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையில் அஸ்டிராய்டுகள் என்று அழைக்கப் படும் விண்பாறைகள் ,சூரியனை வலம் வந்து கொண்டு இருப்பது குறித்து, பல்வேறு விளக்கங்கள் கூறப் படுகின்றன.

சிலர்,அந்த விண்பாறைகளானது,உருவாகாமல் போன ஒரு கிரகத்தின் மிச்சங்களாக இருக்கலாம் என்று நம்புகின்றனர்.அந்த கிரகம் உருவகாமல் போனதற்கு, வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு விசையே காரணம் என்றும் நம்பப் படுகிறது.

வேறு சிலர்,அந்த விண்பாறைகளானது, கிரகங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் உருவாகி இருக்கலாம் என்று நம்புகின்றனர்.

இந்த நிலையில்,அந்த விண்பாறைகளுக்கு இடையில், 950 கிலோ மீட்டர் விட்டத்துடன் ஒரு குறுங் கிரகமும் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

அந்த குறுங் கிரகத்துக்கு, செரெஸ் என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது.

பூமியில் இருந்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வில்,கடந்த 1990 ஆம் ஆண்டின் தொடக்கத்தில்,அந்தக் குறுங் கிரகத்தில்,நீராவி இருப்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளில்,சில சமயம் வளி மண்டலம் இருப்பது தெரிய வந்தது.சில சமயம் அந்த வளி மண்டலம் காணப் பட வில்லை.

அதன் அடிப்படையில்,அந்தக் குறுங் கிரகத்தில்,அவ்வப் பொழுது மட்டும் உருவாகி மறையும், தற்காலிக வளி மண்டலம் இருக்கலாம் என்று நம்பப் பட்டது.

குறிப்பாக, வால் நட்சத்திரங்களானது, சூரியனை நெருங்கும் பொழுது,அதில் இருக்கும் எளிதில் ஆவியாகும் பொருட்கள் ஆவியாகுவதால்,அந்த தலைப் பகுதியானது பெரிதாகும்.

பின்னர் அந்த வால் நட்சத்திரமானது,சூரியனை விட்டு விலகிச் செல்லும் பொழுது,பழைய நிலைக்குத் திரும்பி விடும்.
அதே போன்று,செரெஸ் குறுங் கிரகதிலும் நடக்கும் என்று நம்பப் பட்டது.

இந்த நிலையில்,கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, மைக்கேலா வில்லாரியல்,அந்தக் குறுங் கோளில், வளி மண்டலம் உருவான காலங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

அப்பொழுது,அந்தக் குறுங் கோளில்,வளி மண்டலம் உருவான காலங்களுக்கும், அந்தக் குறுங் கோளானது, சூரியனுக்கு அருகில் இருந்த காலங்களுக்கும், தொடர்பு இல்லாமல் இருப்பது தெரிய வந்தது.

அத்துடன்,அந்தக் குறுங் கோளில் ,வளி மண்டலம் உருவான காலங்களுக்கும்,சூரியனில் அதிக அளவு கதிர் வீச்சு ஏற்பட்ட காலங்களுக்கும், தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.

இதன் தொடர்ச்சியாக,செயற்கைக் கோள் மூலம் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில்,சூரியனில் இருந்து செல்லும், அதிக மின்னூட்டம் பெற்ற துகள்களானது,அந்தக் குறுங் கோளின் மேற்பரப்பில் இருக்கும் பனிப் படலங்களின் மேல் படும் பொழுது,அந்தப் பனிப் படலங்களானது,ஆற்றலைப் பெற்று, நீராவியாக உருவாகுவதால்,அந்தக் குறுங் கிரகத்தில் தற்காலிக வளி மண்டலம் உருவாகுவது தெரிய வந்தது.


அதன் பின்னர்,அந்த நீராவியானது,விண் வெளியில் கலந்து விடுவதால்,அந்த வளி மண்டலமானது, ஓரிரு வாரங்களே நிலைத்து இருப்பதும்,தெரிய வந்திருப்பதாக, மைக்கேலா வில்லாரியல், விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில், செரெஸ் குறுங் கிரகத்தில்,இருந்த,ஒரு பெரிய வட்ட வடிவப் பள்ளத்தில், வெண்நிற படிவங்கள் இருப்பது தெரிய வந்தது.முதலில் அந்தப் படிவங்களானது, பனிப் படலங்கள் என்று கருதப் பட்டது.
இந்த நிலையில்,நாசா ஒரு செயற்கை கோளை,அந்தக் குறுங் கிரகத்துக்கே செலுத்தி,அகச் சிவப்புக் கதிர் நிறமாலைக் கருவி மற்றும் நிறமாலைக் கருவிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டது.அந்த ஆய்வில்,அந்த வெண்ணிறப் படிவங்களானது, உப்புப் படிவங்கள் என்பது தெரிய வந்தது.


குறிப்பாக அந்தப் படிவங்கள் குறித்த நிற மாலையை ஆய்வு செய்த,ரோம் நாட்டின் விண் இயற்பியலாளார்,மரியா கிறிஸ்டினா சான்டிஸ்,அந்தப் படிவங்களானது, பூமியில் சுடு நீர் ஊற்றுப் பகுதிகளில் காணப் படும், சோடியம் கார்பனேட் உப்புகள் என்று தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் அந்தக் குறுங் கிரகத்தின் அடியில், வெப்பமான சூழல் இருப்பதாகவும் தெரிவித்தார்.அத்துடன்,அம்மோனியம் கலந்த களி மண்ணும் இருப்பதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, மீத்தேன் மற்றும் அம்மோனியம் போன்ற எளிதில் ஆவியாகக் கூடிய வாயுக்கள் எல்லாம்,சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில்,குறிப்பாக நெப்டியூன் கிரகம் இருக்கும், அதிகக் குளிர்ச்சியான,பகுதிகளிலேயே
 இருக்க சாத்தியம் என்று தூசித் தட்டுக் கொள்கையின் படி நம்பப் படுகிறது.

எனவே,செரெஸ் குறுங் கிரகமானது,நெப்டியூன் கிரகம் இருக்கும் பகுதியில் உருவாகிய பின்னர்,கிரகங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களால், தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்து இருக்கலாம் என்று,அரிசோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மிகாயில் சாலோடோவ் மற்றும்,கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கிரிஸ் ரஸ்ஸல் ஆகியோர் நம்புகின்றனர்.

அல்லது,செரெஸ் குறுங் கிரகமானது,தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவான பிறகு,சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில் இருந்து, செரெஸ் குறுங் கிரகத்தின் மேல் மோதிய, வால் நட்சத்திரங்கள் மூலம்,செரெஸ் குறுங் கிரகத்திற்கு அம்மோனியா வந்திருக்கலாம் என்றும்,ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

ஆனால், அந்த உப்புப் படிவங்களானது, அந்த உப்புப் படிவங்கள் இருக்கும் வட்ட வடிவப் பள்ளத்துடன் தொடர்பு உடையது என்றும்,வால்நட்சத்திர மோதலால் உருவானது என்றும்,அதே போன்று சுடு நீர் ஊற்று தொடர்பானது என்றும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

இந்த நிலையில்,கார்ஸ்ருக்கி தொழில் நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த,டாக்டர்,மைக்கேல் ஹாப்னேர்,பூமியின் வளி மண்டலத்தின் அகச் சிவப்பு நிறமாலையை ஆய்வு செய்ததன் அடிப்படையில்,ட்ரோபோஸ்பியர்அடுக்கில்,இருக்கும் காற்றில்,ட்ரில்லியனில் முப்பத்தி மூன்று பகுதி என்ற அளவில், அம்மோனியா வாயு இருப்பதைக் கண்டு பிடித்ததாக அறிவித்தார்.



தூசித் தட்டுக் கொள்கையின் அடிப்படையில், பூமியில் அம்மோனியா வாயு இருப்பதற்கு சாத்தியம் இல்லை.எனவே பூமிக்கு எப்படி அம்மோனியா வாயு வந்தது, என்று ஆராய்ச்சியாளர்களுக்கு குழப்பம் வந்து விட்டது.


ஏனென்றால், பூமி உருவான காலத்தில் பூமியானது உருகிய பாறைக் குழம்புக் கோளமாக இருந்ததாக நம்பப் படுகிறது.

எனவே அந்த அதீத வெப்ப நிலையில்,அம்மோனியா, மீத்தேன் போன்ற எளிதில் ஆவியாகக் கூடிய வாயுக்கள் எல்லாம், ஆவியாகி, பூமியை விட்டு வெளியேறி விடும்.

எனவே , பூமிக்கு எப்படி அம்மோனியா வந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.


ஆனால்,சூரிய மண்டலத்தில் பூமி மட்டுமின்றி,செவ்வாய்,வியாழன்,சனி,யுரேனஸ்,நெப்டியூன்,மற்றும் புளூட்டோ என ஒன்பது கிரகங்களிலும்,அம்மோனியா காணப் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.


அத்துடன் , பூமியின் வளி மண்டலத்தில், முக்கால் பாகம் நைட்ரஜன் வாயுவால் ஆனது,கால் பாகம் ஆக்சிஜன் மற்றும் இதர வாயுக்களால் ஆனது.

இந்த நிலையில்,நைட்ரஜன் வாயுவும், பூமிக்கு வால் நட்சத்திரங்கள் மூலம் வந்திருக்கலாம், என்று அரிசோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, பேராசிரியரான சாண்ட்ரா பிசாரெல்லோ,விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.


நைட்ரஜன் மற்றும் கார்பன் போன்றவைகள் உயிர் மூலக் கூறுகள் என்பதால், பூமியில் உயிர் தோன்றக் காரணமாக இருந்திருக்கின்றன.

உயிர் தோன்றிய பிறகு,இறந்த உயிர்கள் மூலம்,பூமியில் மீத்தேன் உருவாகியது, என்று கருதப் படுகிறது.
 

இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில்,மீத்தேன் வாயு இருப்பதாக கியூரியாசிட்டி ரோவர் மூலம் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் தெரிய வந்தது.

எனவே, செவ்வாய்க் கிரகத்துக்கு, மீத்தேன் எப்படி வந்தது,உயிரினங்கள் மூலம் வந்ததா என்றும் ஆராய்ச்சியாளர்கள் குழம்பிக் கொண்டு இருக்கின்றனர்.




Ooooooooooooo
பிளேனட்டரி நெபுலா

பன்னெடுங் காலமாகவே, நம் பூமி உள்பட ஏனைய கிரகங்கள் எப்படித் தோன்றின, என்ற கேள்வி ஆராய்ச்சியாளர்களை ரொம்பவே குழப்பிக் கொண்டு இருந்தது.
இந்த நிலையில்,இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு,யுரேனஸ் கிரகத்தைக் கண்டு பிடித்த, வில்லியம் ஹெர்சல் என்ற ஆராய்ச்சியாளர்,வானத்தை ஆராய்ந்து கொண்டு இருந்த பொழுது,சிறிய புகை மண்டலத்துக்கு நடுவில்,ஒரு சிறிய ஒளிப் புள்ளி இருப்பதைக் கண்டார்.
அந்தப் பொருளானது யுரேனஸ் போலவே, நீல நிறத்தில் இருந்ததால் அதனை ஒரு கிரகமாகக் கருதினார்.அதன் அடிப்படையில்,அதற்கு கிரக மேகம் என்ற பொருளைத் தரும் பதமான, பிளேனட்டரி நெபுலா என்ற பெயரைச் சூட்டினார்.
அதன் பிறகு, இது போன்று, ஆயிரத்தி ஐநூறு பிளேனட்டரி நெபுலாக்கள் இருப்பது தெரிய வந்தது.
ஆனால், அந்தப் பெயரானது ஒரு தவறான பெயர் ( misnomer ) என்று கருதப் பட்டது.ஏனென்றால் உண்மையில் அது போன்ற அமைப்புக்கும், கிரகத்துடன் தொடர்பு இல்லை என்று கருதப் பட்டது.
குறிப்பாக அது போன்ற மேகங்கலானது,ஒரு நட்சத்திரத்தின் கடைசி கால கட்டத்தில்,அதாவது ஒரு நட்சத்திரத்தில் அணுக் கரு வினைகள் முடிந்த நிலையில், நட்சத்திரங்களைச் சுற்றி இருக்கும் வாயு மண்டல அடுக்குகளானது,விரிவடைவதால்உருவாகும் அமைப்பு, என்று புரிந்து கொண்டார்கள்.
குறிப்பாக இது போன்ற வாயு மண்டலங்களானது, சில ஆயிரம் ஆண்டு காலமாகவே நிலைத்து இருப்பதும் தெரிய வந்தது.ஆனாலும் விண்வெளியைப் பொறுத்த மட்டில் இந்தக் காலமானது கண் சிமிட்டும் நேரமே ஆகும்.
இந்த நிலையில் தற்பொழுது,மிரா என்று அழைக்கப் படும் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றிலும், இதே போன்ற அமைப்பு இருப்பது,நவீன தொலை நோக்கி மூலம் ஆய்வு செய்ததன் அடிப்படையில் தெரிய வந்தது.
பூமியில் இருந்து நானூறு ஒளியாண்டு தொலைவில் இருக்கும் மிரா நட்சத்திரமானது ,வெறுங் கண்ணால் காணக் கூடிய நட்சத்திரம் என்பதால் பல நூறு ஆண்டு காலமாகவே இந்த நட்சத்திரத்தைப் பல ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்தனர்.
அணுக்கரு வினை முடியும்,இறுதிக் கால கட்டத்தில் இருக்கும், இந்த நட்சத்திரத்தின் பிரகாசமானது,எண்பது முதல் ஆயிரம் நாளுக்கு ஒரு முறை அதிகரிக்கிறது. இவ்வகை நட்சத்திரங்களானது ஒளி வேறுபாடு அடையும்நட்சத்திரங்கள் என்றும் அழைக்கப் படுகிறது.
இதே போன்று, பிரகாசம் மாறக் கூடிய, முப்பதாயிரத்துக்கும் அதிகமான நட்சத்திரங்கள், நமது பால்வீதி நட்சத்திர மண்டலத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 2007 , ஆம் ஆண்டு, மிரா நட்சத்திரத்தை, புற ஊதா தொலைக் காட்சியில் பார்த்த பொழுது,அந்த
 நட்சத்திரத்துக்கு பதின் மூன்று ஒளியாண்டு நீளமுள்ள வால் இருப்பது தெரிய வந்துள்ளது.
அதாவது சூரியனில் இருந்து புளூட்டோ கிரகம் இருக்கும் தொலைவைக் காட்டிலும்,இருபதாயிரம் மடங்கு தொலைவு ஆகும்.அத்துடன் அந்த நட்சத்திரமானது,தலை தெறிக்கும் வேகத்தில் அதாவது,வினாடிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில்,( வினாடிக்கு எண்பது மைல் ) பயணம் செய்து கொண்டு இருப்பதும் தெரிய வந்தது.
இவ்வாறு அந்த நட்சத்திரமானது அசுர வேகத்தில் விண்வெளியில் பயணம் செய்து கொண்டு இருப்பதால் அந்த நட்சத்திரத்தின் தலைப் பகுதிக்கு முன்னே,தொப்பி போன்ற அமைப்பு உருவாகி இருக்கிறது.அதாவது நீரைக் கிளிதவாறு செல்லும் படகுக்கு முன்பு உருவாகும் வில் போன்ற வளைவு உருவாகுவதைப் போன்று,மிரா நட்சத்திரத்துக்கு முன்பும் ஒரு வில் போன்ற வளைவு உருவாகி இருக்கிறது.அந்த வில் வளைவானது போ ஷாக் என்று அழைக்கப் படுகிறது.
மிரா நட்சத்திரத்தின் தலைப் பகுதியில் இருந்து,ஒவ்வொரு ஆண்டும்,பூமியின் அளவுள்ள சூடான வாயுக்களும் வெளியேறிக் கொண்டு இருக்கிறது.
குறிப்பாக,மிரா நட்சத்திரத்தின் வாலானது, முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருப்பதாகக் கணிக்கப் பட்டு இருக்கிறது.
மிரா நட்சத்திரத்துக்கு, ஒரு துணை நட்சத்திரமும் இருக்கிறது.மிரா-பி,என்று அழைக்கப் படும் அந்த நட்சத்திரமானது,ஒரு நட்சத்திரத்தின் இறப்பில் உருவாகக் கூடிய வெண்குறு நட்சத்திரம் என்பதும் தெரிய வந்துள்ளது.
அத்துடன் அந்த துணை நட்சத்திரமானது,மிரா நட்சத்திரத்தில் இருந்து,நூறு விண்வெளி அலகு தொலைவில் இருக்கிறது.ஒரு விண்வெளி அலகு என்பது சூரியனில் இருந்து பூமி இருக்கும் தொலைவு ஆகும்,அதாவது பதினைந்து கோடி கிலோ மீட்டர் ஆகும்.
மிரா நட்சத்திரத்தில் இருந்து வெளியேறும் வாயுக்களில் ஒரு சதவீதம்,மிரா நட்சத்திரத்தின் துணை நட்சத்திரத்தின் ஈர்ப்பு சக்தியால் கவர்ந்து கொள்ளப் படுகிறது.
அத்துடன் அந்த வாயு மற்றும் தூசிப் பொருட்களானது,மிரா நட்சத்திரத்தின் துணை நட்சத்திரத்தைச் சுற்றிலும் வளையங்களைப் போன்று சுற்றி இருக்கிறது.
குறிப்பாக அந்த வளையத்தில் இருக்கும் தூசி மற்றும் வாயுக்களானது பூமியின் அளவில் இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி தூசி மற்றும் வாயுக்களால் ஆன வளையமானது புரோட்டோ பிளேனட்டரி டிஸ்க்அதாவது கிரகங்களை உருவாக்கும் தட்டு என்றும் அழைக்கப் படுகிறது.
ஏனென்றால், இது போன்ற நட்சத்திரத்தைச் சுற்றி இருக்கும் வளையங்களில் இருக்கும் தூசிகள் மற்றும் வாயுக்கள் திரண்டுதான் கிரகங்கள் உருவாகுகின்றன என்று நம்பப் படுகிறது.
00000000000000
சூரிய மண்டலத்தின் தோற்றத்தை விளக்கும் தூசித் தட்டுக் கொள்கை ஒரு தவறான விளக்கம், என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.

முன் ஒரு காலத்தில்,விண் வெளியில் இருந்த ஒரு ராட்சத விண் மேகமானது,திடீரென்று சுருங்கிச் சுழன்றதாகவும்,அப்பொழுது மத்தியப் பகுதியில்,இருந்த பருத்த பகுதியானது,சூரியனாக உருவானதாக நம்பப் படுகிறது.

அதன் பிறகு பல லட்சம் ஆண்டு காலத்தில்,சூரியனைச் சுற்றி சுழன்று கொண்டு இருந்த,தூசிகளும் வாயுக்களும்,ஆங்காங்கே ஒன்று திரண்டதால்,கிரகங்களாக உருவானதாக நம்பப் படுகிறது.

இந்தக் கருத்தானது,தூசித் தட்டுக் கொள்கை, என்று அழைக்கப் படுகிறது.

குறிப்பாகச் சூரியனில் இருந்து வெளியான வெப்பத்தின் காரணமாக, சூரியனுக்கு அருகில் இருந்த,நீர் மூலக் கூறுகள் உள்பட,எளிதில் ஆவியாகக் கூடிய வாயுக்கள் எல்லாம்,சூரியனில் இருந்து அதிக தொலைவுக்கு சென்றதாகக் கருதப் படுகிறது.

அதனால், சூரியனுக்கு அருகில்,குறைந்த அளவில் இருந்த,இரும்பு போன்ற உலோகங்களும் மற்ற தாதுப் பொருட்கள் மட்டும் குளிர்ந்ததால், புதன்,வெள்ளி,பூமி மற்றும் செவ்வாய் போன்ற சிறிய அளவிலான,பாறைக் கிரகங்களானது,மிக அதிக கால கட்டத்தில், உருவானதாகவும் நம்பப் படுகிறது.

ஆனால், சூரியனில் இருந்து அதிக தொலைவில்,குளிர்ச்சியாக இருந்த பகுதியில், அதிக அளவில் இருந்த பொருட்கள்,எளிதில் திரண்டதால்,பெரிய அளவிலான கிரகங்கள்,குறைந்த கால கட்டத்தில்,உருவானதாக நம்பப் படுகிறது.

அதன் பிறகு,அந்தப் பெரியக் கிரகங்களானது,அந்தப் பகுதிகளில் இருந்த அதிக அளவிலான வாயுக்களைக் கவர்ந்ததால்,வியாழன்,சனி,யுரேனஸ்,மற்றும் நெப்டியூன் போன்ற வாயுக் கோள கிரகங்கள் உருவானதாகவும்,நம்பப் படுகிறது.

ஆனால், அண்மைக் காலங்களில்,மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம்,தூசித் தட்டுக் கருத்து தவறு, என்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாகச் சூரியனில் இருந்து வெளி வரும் கதிர் வீச்சின் காரணமாக,சூரியனுக்கு அருகில் இருக்கும் புதன்,வெள்ளி,பூமி,மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களில் இருந்து, ஹைட்ரஜன்,ஆக்சிஜன், சோடியம்,போன்ற வாயுக்கள் வெளியேற்றப் படுவது,செயற்கைக் கோள் ஆய்வில்,கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

எனவே, சூரியனுக்கு அருகில், ஹைட்ரஜன்,ஆக்சிஜன், சோடியம்,போன்ற வாயுக்களுடன்,புதன்,வெள்ளி,பூமி,செவ்வாய் போன்ற கிரகங்கள் எப்படி உருவானது, என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
முக்கியமாக, சூரியனுக்கு அருகில் இருக்கும், பூமியின் வளி மண்டலத்தில்தான் அதிக அளவில் அதாவது,எழுபத்தி எட்டு சதவீதம்,நைட்ரஜன் வாயு இருக்கிறது.

இந்த நிலையில்,சூரியனில் இருந்து அதிக தொலைவில்,அதாவது,சூரியனில் இருந்து, பூமி இருக்கும் தொலைவை விட,நாற்பது மடங்கு தொலைவில் இருக்கும்,புளூட்டோவில் இருந்து, சூரியக் கதிர் வீச்சின் காரணமாக,நைட்ரஜன் வாயு வெளியேற்றப் படுவது,சமீபத்தில் செயற்கைக் கோள் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.

எனவே,சூரியனுக்கு அருகில் இருக்கும் கிரகமான, பூமி எப்படி அதிக அளவில் நைட்ரஜன் வாயுவுடன் உருவானது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதே போன்று, சூரியக் கதிர் வீச்சின் காரணமாக, நிலவில் இருந்து, சோடியம் வாயு வெளிப் பட்டுக் கொண்டு இருப்பதும்,செயற்கைக் கோள் ஆய்வில்,கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இந்த நிலையில்,சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகமான,புதன் கிரகத்தில் இருந்தும்,நிலவில் இருந்தும்,சூரியக் கதிர் வீச்சின் காரணமாக, சோடியம் வாயு வெளிப் பட்டுக் கொண்டு இருப்பதும்,செயற்கைக் கோள் ஆய்வில்,கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

எனவே,புதன் கிரகமானது எப்படி சூரியனுக்கு அருகில்,சோடியம் வாயுவுடன் உருவானது,என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதே போன்று, சூரியனை நோக்கி வரும் வால் நட்சத்திரங்களில்,குறிப்பாக
 அந்த வால் நட்சத்திரங்களானது,செவ்வாய் கிரகம் இருக்கும் தொலைவை நெருங்கும் பொழுதே,அந்த வால் நட்சத்திரங்களில் இருந்து, நீர் மற்றும் கார்பன் டை ஆக்சைட் வாயுக்களானது.சூரியனின் கதிர் வீச்சின் காரணமாக,வெளியேற்றப் படுவதும்,செயற்கைக் கோள் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.

எனவே, சூரியனுக்கு அருகில், ஹைட்ரஜன்,ஆக்சிஜன்,சோடியம்,போன்ற வாயுக்களுடன்,புதன்,வெள்ளி,பூமி,செவ்வாய் போன்ற கிரகங்கள் எப்படி உருவானது, என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

குறிப்பாக, சூரியனில் இருந்து அதிக தொலைவில் இருக்கும் கிரகங்களில் இருந்து,சூரியனின் கதிர் வீச்சு காரணமாக, வெளியேற்றப் படும் வாயுக்களுடன்,சூரியனுக்கு அருகில் ஒரு கிரகம் உருவாக இயலாது.

எனவே,முன் ஒரு காலத்தில்,சூரியனைச் சுற்றி ஒரு தூசிகளும வாயுக்களும் சுழன்று கொண்டு இருந்ததாகவும,அந்தத் தூசிகளும் வாயுக்களும் ஆங்கங்கே திரண்டதால் கிரகங்கள் உருவானதாகவும் கூறப் படும் விளக்கமானது, ஒரு தவறான விளக்கம், என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
00000000000000000
சூரிய மண்டலம் உள்பட, வால் நட்சத்திரங்களின் தோற்றத்தை விளக்கும், தூசித் தட்டுக் கொள்கையானது, ஒரு தவறான விளக்கம், என்பது வால் நட்சத்திரங்களில் காணப் படும் பொருட்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

முன் ஒரு காலத்தில்,விண்வெளியில் இருந்த, ஒரு ராட்சத விண் மேகமானது,திடீரென்று சுருங்கிச் சுழன்றதாகவும்,அப்பொழுது மத்தியப் பகுதியில்,இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,அதைச் சுற்றி சுழன்று கொண்டு இருந்த தூசி மற்றும் வாயுக்களானது,அங்காங்கே திரண்டதால் கிரகங்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது.

இந்தக் கருத்தின் படி,சூரியனுக்கு அருகில் அதிக வெப்ப நிலை இருந்ததாகவும்,அதனால் அந்தப் பகுதியில் இருந்த எளிதில் ஆவியாகக் கூடிய, ஹைட்ரஜன்,சோடியம் குளோரின்,மீத்தேன் அம்மோனியா போன்ற வாயுக்களானது,சூரியனில் இருந்து அதிக தொலைவுக்கு,சூரியக் கதிர் வீச்சால் கொண்டு செல்லப் பட்டதாக நம்பப் படுகிறது.

அதன் பின்னர், இது போன்ற இலேசான வாயுக்களானது,சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில் திரண்டதால்,வியாழன் போன்ற ராட்சத வாயுக் கோள கிரகங்கள் உருவானதாக நம்பப் படுகிறது.

குறிப்பாக, புளுட்டோவுக்கும் அப்பால், வால் நட்சத்திரங்கள் உருவாகுவதாக நம்பப் படுகிறது.
எனவே வால் நட்சத்திரங்களில், கார்பன் டை ஆக்சைடு,நீர்,சோடியம் போன்ற எளிதில் ஆவியாகக் கூடிய பொருட்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த நிலையில்,வைல்ட்-2 , என்ற வால் நட்சத்திரத்தில் இருந்து,ஸ்டார் டஸ்ட் என்ற செயற்கைக் கோள் மூலம், சேகரிக்கப் பட்ட துகள்களை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியப் பட்டனர்.

ஏனென்றால், அந்த வால் நட்சத்திரத்தில்,சிலிகேட் படிகப் பாறையான, ஆலிவியன்,அனோர்டைட்,மற்றும்
 டையாப் சைட் ஆகிய பாறைத் துகள்கள் இருந்தன.

ஆனால்,இவ்வகைப் பாறைப் பொருட்களானது,சூரியனுக்கு அல்லது நட்சத்திரங்களுக்கு அருகில்,அதிக வெப்ப நிலையில் உருவாகக் கூடியது.

தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வில்,அந்த வால் நட்சத்திரத் துகள்களில்,நீரின் உதவியுடன் உருவாகும்,இரும்பு மற்றும் காப்பர் சல்பேட் ,இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர்.

எனவே,கிரகங்கள் மற்றும் வால் நட்சத்திரங்களின் தோற்றம் பற்றிய, தூசித் தட்டுக் கொள்கையானது, ஒரு தவறான கருத்து, என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
000000000000000
நிலவில், எதிர்பார்த்ததை விட அதிக அளவில், நீர் இருப்பது, பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பானது,நிலவின் தோற்றம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறி வந்த விளக்கங்களின் மேல் சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது.
முன் ஒரு காலத்தில்,விண் வெளியில்,இருந்த ஒரு ராட்சத விண் மேகமானது,திடீரென்று தட்டையாகிச் சுருங்கிச் சுழலன்றதாக நம்பப் படுகிறது.


அப்பொழுது,மத்தியப் பகுதியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,ஓரப் பகுதியில் இருந்த, தூசி மற்றும் வாயுக்கள், ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,மற்ற கிரகங்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது.

இந்தக் கருத்தின் படி, எல்லாக் கிரகங்களும், சூரியனை ஒரே தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு இல்லாமல் நிலவானது,பூமியை,சூரியனை பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.
அதுமட்டுமின்றி, சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்கள் மற்றும் அதன் துணைக் கோள்களின் தனிமங்கள் மற்றும் அந்தத் தனிமங்கள் கலந்து இருக்கும் விகிதாச் சாரமானது ஒன்றுக் கொன்று வேறுபட்டு இருக்கிறது.

ஆனால்,நிலவில் இருந்து எடுத்துவரப் பட்ட பாறைகளை ஆய்வு செய்த பொழுது,அதில் இருந்த தனிமங்கள் மற்றும் அந்தத் தனிமங்கள் கலந்து இருந்த விகிதாச் சாரமானது பூமியின் பாறைகளை ஒத்து இருந்தது.

இதனை விளக்குவதற்காக ஒரு கருத்து முன் வைக்கப் பட்டது.

அதாவது, முன் ஒரு காலத்தில்,பூமியின் மேல்,தியா என்று பெயர் சூட்டப் பட்ட,செவ்வாய் கிரக அளவுள்ள,ஒரு கோள் அதி வேகத்தில் மோதியதாகவும்,அப்பொழுது ஏற்பட்ட அதீத வெப்பத்தில்,பூமியின் மேலடுக்குகள் ஆவியாக்கப் பட்டு ,அதன் பகுதிகளானது,பூமியின் சுற்றுப் பாதைக்குத் தள்ளப் பட்டதாக நம்பப் பட்டது.

அதன் பிறகு, பூமி மற்றும் தியா கிரகத்தின் சிதறுண்ட பாகங்களானது, ஒன்றாக இணைந்ததால்,நிலா உருவானதாகவும்,நம்பப் பட்டது.
இந்தக் கருத்தானது 'பிரமாண்ட மோதல்' ( Moon giant impact theory ) என்று அழைக்கப் படுகிறது.

இந்த மோதலின் பொழுது,அதீத வெப்பம் உருவானதாகவும்,அப்பொழுது பாறைகள் கூட உருகி இணைந்ததாகவும் கூறப் படுகிறது.

இது போன்ற அதீத வெப்ப நிலையில்,ஹைட்ரஜன்,குளோரின்,பொட்டாசியம்,சோடியம்,போன்ற
 எளிதில் ஆவியாகக் கூடிய வாயுக்கள் எல்லாம் ஆவியாகி விண்வெளியில் கலந்து விட்டிருக்கும், என்பதால் நிலவில் இது போன்ற,எளிதில் ஆவியாகக் கூடிய, வாயுக்கள் இருக்க சாத்தியம் இல்லை என்று எதிர் பார்க்கப் பட்டது.
ஆனால் ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்த்ததற்கு மாறாக,தற்பொழுது, நிலவில் நீர் அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக நீரானது, ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுக்கள் இணைவதால் உருவாகுகிறது.

குறிப்பாக நிலவின் மேற்பரப்பில் பரவலாக,ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் இணைவதால் உருவாகும் ஹைட்ராக்சில் அதிக அளவில் இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.
எனவே,நிலவில் எப்படி எளிதில் ஆவியாகக் கூடிய ஹைட்ரஜன் வந்தது என்ற கேள்வி எழுந்தது.

இந்தக் கேள்விக்கு ஒரு விளக்கம் கூறப் பட்டது.

அதாவது,நிலவுக்கு சூரியனில் இருந்து ஹைட்ரஜன் வந்து இருக்கலாம் என்றும்,அவ்வாறு வந்த ஹைட்ரஜன் அணுவானது,நிலவின் மேற்பரப்பில் இருக்கும் பாறை மற்றும் மணலில் இருந்த ஆக்சிஜன் அணுக்களுடன் இணைந்ததால் நிலவின் மேற்பரப்பில், ஹைட்ராக்சில் உருவாகி இருக்கிறது என்று கருதப் பட்டது.

அதே போன்று நிலவின் மேற்பரப்பில் இருக்கும் நீரில் ஒரு பகுதியானது விண் வெளியில் இருந்து
 நிலவின் மேல் விழுந்த,விண்பாறைகள் மூலமாக வந்து இருக்கலாம் என்றும் நம்பப் பட்டது.

ஆனால், நிலவில் இருக்கும் பாறைகள் எப்படி உருவானது என்பது குறித்து ஆய்வு செய்த,நெதர்லாந்து நாட்டில் உள்ள,விர்ஜி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,புவி வேதியியல் வல்லுனரான டாக்டர்,விம் வான் வெஸ்டெரேன்,நிலவில் உள்ள பாறைகளானது, நீருடன் சேர்ந்து உருவானது தெரிவித்து இருக்கிறார்.

அதன் அடிப்படையில்,நிலா உருவான காலத்திலேயே,நிலவில் நீர் இருந்து இருக்கிறது என்றும் தெரிவித்து இருக்கிறார்.

அதாவது, விண் பாறைகள் நிலவைத் தாக்குவதற்கு முன்பே, நிலவின் மேற்பரப்பில் நீர் இருந்திருக்கிறது என்று, டாக்டர்,விம் வான் வெஸ்டெரேன், தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் தற்பொழுது,நிலவில்,எரிமலைச்செயல் பாட்டினால்,நிலவின் அடிப்பகுதியில் இருந்து,நிலவின் மேற்பரப்புக்கு வந்த,பாறைத் துணுக்குகளுக்கு உள்ளே,அதிக அளவில் நீரின் மூலக் கூறுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக,அந்த எரிமலைப் பாறைத் துணுக்குகளானது,நிலவின் அடிப் பகுதியியிலேயே உருவானவைகள் என்பதால்,அதனுள் இருக்கும் நீரானது,நிலவின் ஆழமான பகுதியில் இருந்த நீராகும்.
அது மட்டுமின்றி இது போன்ற எரிமலைச் செயல் பாட்டின் பொழுது தொண்ணூற்றி ஐந்து சதவீத நீரானது ஆவியாகி விடும்.
எனவே,நிலவின் மேற்பரப்பில் இருந்த எரிமலைப் பாறைத் துணுக்குகளுக்கு உள்ளே இருந்த நீரானது,நிலவின் ஆழமான பகுதியில் இருந்த நீரின் ஒரு சிறிய பகுதியையே குறிக்கிறது.

இதன் அடிப்படையில்,நிலவில் ஒரு காலத்தில்,தற்பொழுது பூமிக்கு அடியில் இருக்கும் நீரின் அளவில் நீர் இருந்து இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இதே போன்று,நிலவின் துருவப் பகுதிகளிலும் நீரானது பனிக் கட்டி வடிவில் இருப்பதும் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட செயற்கைக் கோள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு நிலவில் எதிர்பார்க்கப் பட்டதை விட அதிக அளவில் நீர் இருப்பதன் அடிப்படையில்,எளிதில் ஆவியாகி விடக் கூடிய ஹைட்ரஜன் வாயுவானது,நிலவுக்கு எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனால்,நிலா எப்படி உருவானது என்பதற்கு கூறப் பட்ட பிரமாண்ட மோதல் கருத்த்தின் மேல் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே,நிலவானது ஏன்,சூரியனை பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் வலம் வராமல்,அந்தத் தளத்திற்கு ஐந்து டிகிரி சாய்வான கோணத்தில்,பூமியை வலம் வந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்வியும்,விடை கூறப் பட வேண்டிய நிலையில் இருக்கிறது.
எனது விளக்கம்.

சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்கள் மற்றும் அதன் துணைக் கிரகங்கள் அனைத்துமே எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் உள்ளே உருவாகி,சூரியனால் ஈர்க்கப் பட்டவைகள்.

சூரியனை நோக்கி வந்த சிறிய கிரகங்களை,மற்ற கிரகங்கள் ஈர்த்து இருக்கின்றன.

குறிப்பாக கிரகங்களின் நில நடுக் கோட்டுப் பகுதியானது,பருத்து இருப்பதால்,அதன் துணைக் கிரகங்களானது,நிறை ஈர்ப்பு விசையின் படி,கிரகங்களின் நில நடுக் கோட்டுப் பகுதியை வலம் வந்து கொண்டு இருக்கின்றன.

இந்த நிலையில்,அந்தக் கிரகங்களானது.சூரியனின் நில நடுக் கோட்டுப் பகுதியை வலம் வந்து கொண்டு இருக்கின்ற அதே வேளையில்,விண் வெளியில்,சூரியனானது முன் நோக்கி நகர்ந்து விடுகிறது.

எனவே,சூரியனின் நில நடுக் கோட்டுப் பகுதியை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களானது.சூரியனை நோக்கி நகர்கிறது.

இதனால்,சூரியனின் நில நடுக் கோட்டுப் பகுதிக்கு இணையாக வலம் வர வேண்டிய கிரகங்களானது,சூரியனின் நில நடுக் கோட்டுப் பகுதிக்குச் சாய்வான கோணத்தில் வலம் வர வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறது.

அதே போன்று,கிரகங்களின் நில நடுக் கோட்டுப் பகுதியை வலம் வர வேண்டிய,துணைக் கிரகங்களும்,சூரியனை நோக்கி நகரும்,கிரகங்களை நோக்கி நகர்வதால்,கிரகங்களின் நில நடுக் கோட்டுப் பகுதிக்கு இணையாக வலம் வர இயலாமல்,அந்தக் கிரகங்களின் நில நடுக் கோட்டுக்கு சாய்வான தளத்தில்,வலம் வர வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறது.
000000000000000000000
ஒன்பதாவது கிரகத்தைத் தேடி...
சூரியன் உள்பட அதன் கிரகங்கள் எல்லாம்,நாலரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,விண்வெளியில்,சுழன்று கொண்டு இருந்த ஒரு தூசித் தட்டில் இருந்து உருவானதாக நம்பப் படுகிறது.

குறிப்பாக சுழன்று கொண்டு இருந்த,அந்த தூசித் தட்ட்டின் பருத்த மையப் பகுதியானது,சூரியனாக உருவானதாகவும்,தட்டையான ஓரப் பகுதிகள் ஆங்காங்கே திரண்டதால்,மற்ற கிரகங்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது.

இதன் அடிப்படையில்,சூரியனானது தன் அச்சில் சுழன்று கொண்டு இருக்கும் அதே தளத்திலேயே,எல்லாக் கிரகங்களும் சூரியனை வலம் வந்து கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் பட்டது.

இந்த நிலையில்,சூரியனானது,ஆறு டிகிரி சாய்வாக சுழன்று கொண்டு இருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில், சூரியனானது ஆறு டிகிரி சாய்ந்து இருக்கவில்லை என்றும், மாறாக,கிரகங்களின் சுற்றுத் தளம்தான்,ஆறு டிகிரி சாய்ந்து இருக்கிறது என்று,கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,பேராசிரியர்களான டாக்டர் கான்ஸ்டான்டின் பேடிஜின்,டாக்டர் மைக் பிரவுன் மற்றும் அவர்களின் பட்டப் படிப்பு மாணவியான எலிசபெத் பெய்லி ஆகியோர் ஒரு புதிய விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.

ஆனாலும் கிரகங்கள் எல்லாம் சூரியனை வெவ்வேறு கோணங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறது என்பதுதான் உண்மை.

அத்துடன்,இவ்வாறு சூரியனைக் கிரகங்கள் எல்லாம் சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில்,அதாவது புளுட்டோவுக்கும் அப்பால்,இருந்த படி சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும், இன்னும் கண்டுபிடிக்கப் படாத, ஒரு கிரகத்தின் ஈர்ப்பு விசையே காரணம், என்று டாக்டர் மைக் பிரவுன் கூறுகிறார்.

குறிப்பாக ஒன்பதாவது கிரகம் என்று அழைக்கப் படும் அந்தக் கிரகமானது, டாக்டர் மைக் குழுவினர், கணிப் பொறி மூலம் உருவாக்கிய மாதிரிகளின் படி,பூமியை விட நான்கு மடங்கு பெரிய அளவுடனும்,அதே நேரத்தில் பூமியை விடப் பத்து மடங்கு அதிக எடையுடன் இருக்கக் கூடும், என்று நம்பப் படுகிறது.

அத்துடன், அந்தக் கிரகத்தின் சுற்றுப் பாதையானது,மற்ற கிரகங்களின் சுற்றுத் தளத்திள் இருந்து விலகி, முப்பது டிகிரி கோணத்தில் அமைந்து இருக்கும் என்றும் , டாக்டர் மைக் பிரவுன் தெரிவித்து இருக்கிறார்.

குறிப்பாக தூசித் தட்டுக் கருத்தின் படி நெப்டியூன் கிரகத்துக்கு அப்பால் ஒரு பெரிய கிரகம் உருவாக வாய்ப்பு இல்லை என்று கருதப் படுகிறது.

எனவே ஒன்பதாவது கிரகம் எப்படி சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில் உருவானது என்ற கேள்விக்கு, டாக்டர் மைக் பிரவுன்,அந்த கிரகமானது,சூரிய மண்டலத்தின் உள் பகுதியில் உருவான பிறகு, வியாழன் கிரகத்தால் வெளித் தள்ளப் பட்டு இருக்கலாம் என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.

வியாழன் கிரகமானது,பூமியை விட முன்னூறு மடங்கு எடையுடனும்,சனி கிரகமானது பூமியை விட,தொண்ணூற்றி ஐந்து மடங்கு எடையுடனும் இருக்கும் நிலையில்,எப்படி பூமியை விடப் பத்து மடங்கு அதிக எடையுள்ள ஒரு கிரகமானது,மற்ற கிரகங்களின் சுற்றுத் தளத்தை வளைக்கும் என்ற கேள்விக்கு டாக்டர்,மைக் பிரவுன்,அந்தக் கிரகத்தின் சுற்றுப் பாதையானது,பெரிய அளவில் இருப்பதால் அந்தக் கிரகமானது மற்ற கிரகங்களின் சுற்றுத் தளத்தை வளைக்கிறது, என்று டாக்டர் மைக் பிரவுன் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில்,நெப்டியூன் கிரகத்துக்கு அப்பால்,புளூட்டோவைப் போலவே ஆறு குறுங் கிரகங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.

அத்துடன் அந்தக் குறுங்கிரகங்களின் சுற்றுப் பாதையும்,மற்ற கிரகங்களின் பொது சுற்றுத் தளத்திற்கு, முப்பது டிகிரி கோணத்தில் அமைந்து இருப்பதும் கணிப் பொறி மாதிரிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு, அந்த ஆறு குறுங் கிரகங்களின் சுற்றுப் பாதையானது, மற்ற கிரகங்களின் பொது சுற்றுத் தளத்திற்கு, முப்பது டிகிரி கோணத்தில் அமைந்து இருப்பதற்கு,அந்த ஒன்பதாவது கிரகத்தின் ஈர்ப்பு விசைதான் காரணம் என்றும், என்று டாக்டர் மைக் பிரவுன் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.

இதே போன்று,வாசிங்டன்னில் இருக்கும் கார்னெகி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,ஸ்காட் செப்பர்ட், நெப்டியூனுக்கு அப்பால் இருந்தபடி சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் ஒரு குறுங் கிரகத்தைக் கண்டு பிடித்தார்.

அந்தக் குறுங் கிரகத்தின் சுற்றுப் பாதையானது, வளைந்து இருப்பதற்கு,அந்தப் பகுதியில் இருக்கும் ஒன்பதாவது கிரகத்தின் ஈர்ப்பு விசைதான் காரணம் என்றும் ஸ்காட் செப்பர்ட் தெரிவித்து இருக்கிறார்.

அதன் அடிப்படையில்,ஒன்பதாவது கிரகம் இருப்பதற்கு தொண்ணூறு சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும் செப்பர்ட் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்த,கனடாவில் உள்ள வானோக்கு ஆய்வகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான ஜே ஜே காவேலார்ஸ்,ஒன்பதாவது கிரகம் இருப்பதற்கு ஒரு சதவீதம் வாய்ப்பே இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

ஒன்பதாவது கிரகத்தைக் கண்டு பிடிப்பதற்காக, மைக் பிரவுன் குழுவினரும் செப்பர்ட் குழுவினரும்,நவீன தொலை நோக்கி மூலம்,அந்தக் கிரகம் இருப்பதாகக் கருதப் படும், திசையில் தேடிக் கொண்டு இருக்கின்றனர்.

அந்தத் திசையில், பெரும் பரப்பில் தேடியும் இன்னும் அந்தக் கிரகம் தென்படவில்லை.
 

இருப்பினும் இன்னும் பத்து சதவீதம் வாய்ப்பு இருப்பதாக டாக்டர் மைக் பிரவுன் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

குருங் கிரகங்களின் சுற்றுப் பாதையானது, ஏன் மற்ற கிரகங்களின் சுற்றுத் தளத்த்தில் இருந்து, அதிகம் விலகி இருக்கிறது?

சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களின் சுற்றுப் பாதையானது,சூரியன் நகர்ந்து கொண்டு இருக்கும் திசைக்கு, அறுபது டிகிரி கோணத்தில் சாய்வாக இருப்பதற்கு, சூரியனின் முன் நோக்கிய நகர்வே காரணம், என்று ஏற்கனவே நான் விளக்கம் தெரிவித்து இருந்தேன்.

அத்துடன்,வானில் மெதுவாக நகர்ந்து சென்று கொண்டு இருக்கும், ஒரு ராட்சச மஞ்சள் நிற பலூனை (சூரியனை), காகங்கள் (கிரகங்கள்) மேல் கீழாக வட்டமடிக்க ஆரம்பித்தால்,அந்தக் காகங்களின் (கிரகங்களின்) சுற்றுப் பாதையானது, அந்த பலூன் (சூரியன்) நகர்ந்து செல்லும் திசைக்குச் சாய்வாக இருக்கும், என்றும் விளக்கம் தெரிவித்து இருந்தேன்.

இந்த நிலையில்,அதே மஞ்சள் நிற பலூனை,மேலும் சில காகங்கள்,இன்னும் சற்று தொலைவில் இருந்தபடி,பெரிய வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருந்தால்,அந்தக் காகங்களின் சுற்றுப் பாதையானது எப்படி இருக்கும்?

அந்தக் காகங்களின் சுற்றுப் பாதையானது,மிகவும் நீண்டு இருப்பதுடன், மற்ற உள் வட்டக் காகங்களின், சுற்றுப் பாதைத் தளத்தில் இருந்து, அதிகம் விலகி இருக்கும்.

அதே போன்றுதான், சூரியனை அதிக தொலைவில் இருந்தபடி, வலம் வந்து கொண்டு இருக்கும், குறுங்கிரகங்களின் சுற்றுப் பாதையானது,மற்ற கிரகங்களின் சுற்றுப் பாதைத் தளத்தில் இருந்து, அதிகம் விலகி இருக்கிறது.
சூரிய மண்டலத்தின் விளிம்புப் பகுதியில்,நெப்டியூன் கிரக அளவில் ஒரு கிரகம் இருக்கக் கூடும் என்று பல ஆராய்ச்சியாளர்கள் நம்பிக் கொண்டு இருந்தனர்.

ஆனாலும்,கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்,நாசாவின் அகச் சிவப்புக் கதிர் தொலை நோக்கி மூலம் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில்,அப்படி ஒரு கிரகம் இருப்பதற்கான சாத்தியம் இல்லை என்று தெரிவித்து இருக்கிறது.

குறிப்பாக,சூரியனில் இருந்து,பத்தாயிரம் வானியல் அலகு தொலைவில், (ஒரு வானியல் அலகு என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தொலைவு ஆகும். அதாவது பதினைந்து கோடி கிலோ மீட்டர்) பூமியை விட தொண்ணூற்றி ஐந்து மடங்கு பெரிய அதாவது சனி கிரகத்தின் அளவுள்ள கிரகம் எதுவும் இல்லை என்று நாசா தெரிவித்து இருக்கிறது.

அதே போன்று, சூரியனில் இருந்து,இருபத்தியாறாயிரம் வானியல் அலகு தொலைவில், பூமியை விட முன்னூற்றி பதினெட்டு மடங்கு பெரிய அதாவது வியாழன் கிரகத்தின் அளவுள்ள கிரகம் எதுவும் இல்லை என்று நாசா தெரிவித்து இருக்கிறது.
00000000000000
நட்சத்திரக் கூட்டங்களில் அதிக எண்ணிக்கையில் கிரகங்கள் !
நட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில்,அதிக எண்ணிக்கையில், கிரகங்கள் காணப் படுவது, அறிவியல் உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பூமியில் இருந்து மூவாயிரம் ஒளியாண்டு தொலைவில் இருக்கும், என் ஜி சி 6811 என்று அழைக்கப் படும் நட்சத்திரக் கூட்டத்துக்கு மத்தியில்,நெப்டியூன் கிரகத்தின் அளவில் இருக்கும், இரண்டு கிரகங்களை,ஹார்வர்ட் ஆய்வகத்தைச் சேர்ந்த டாக்டர் சோரென் மெய்பாம் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

குறிப்பாக அந்த நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கும்,கெப்ளர் 66 என்று பெயரிடப் பட்ட நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகத்துக்கு, கெப்ளர் 66 - பி என்றும், அதே போன்று, கெப்ளர் 67 என்று பெயரிடப் பட்ட நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகத்துக்கு, கெப்ளர் 67 –பி,என்றும் பெயர் சூட்டப் பட்டுள்ளது.

இந்த இரண்டு நட்சத்திரங்களும், அதனதன் நட்சத்திரங்களை,முறையே, பதினேழு,மற்றும் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வலம் வந்து கொண்டு இருக்கின்றன.

இந்த இரண்டு கிரகங்களும், அதன் நட்சத்திரங்களுக்கும், பூமிக்கும் இடையில் வந்ததன் காரணமாக,குறிப்பிட்ட கால இடைவெளியில்,ஏற்பட்ட, ஒளிக் குறைவை, நுட்பமாக அளந்ததன் அடிப்படையில், (Transit method) கண்டு பிடிக்கப் பட்டன.

இதே போன்று,பூமியில் இருந்து,இரண்டாயிரத்தி ஐநூறு ஒளியாண்டு தொலைவில்,இருக்கும்,மெஸ்சியர்-67,என்று அழைக்கப் படும்,நட்சத்திரக் கூட்டத்திலும்,மூன்று நட்சத்திரங்களை,வியாழன் கிரகம் போன்ற மூன்று கிரகங்கள்,வலம் வந்து கொண்டு இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

இந்த மூன்று கிரகங்களும், ஈர்ப்பு விசையின் காரணமாக, அதன் நட்சத்திரங்களில்,குறிப்பிட்ட கால இடைவெளியில்,ஏற்படுத்திய, சிறிய அளவிலான அசைவை நுட்பமாக அளந்ததன் அடிப்படியில்,(wobble method) கண்டு பிடிக்கப் பட்டன.

இந்த ஆய்வானது, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த, டாக்டர் ரோபெர்டோ சாகிலா தலைமையில் மேற்கொள்ளப் பட்டது.

குறிப்பாக, மெஸ்சியர் நட்சத்திரக் கூட்டத்தில்,ஐநூறுக்கும் அதிகமான நட்சத்திரங்கள் இருக்கின்றன.

அதில், டாக்டர் சாகிலா குழுவினர்,நமது சூரியன் போன்று இருக்கும் அறுபத்தி ஆறு நட்சத்திரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்ததன் அடிப்படையில், இந்த மூன்று கிரகங்களும் கண்டு பிடிக்கப் பட்டன.

இதன் அடிப்படையில்,நட்சத்திரக் கூட்டத்தில்,ஐந்து சதவீத நட்சத்திரங்களைக் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளதாக, டாக்டர் சாகிலா தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் கூட்டமாக இல்லாமல், தனியாக இருக்கும் நட்சத்திரங்களில்,ஒரு சதவீத நட்சத்திரங்களையே,வியாழன் போன்ற கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

நட்சத்திரக் கூட்டங்களில் கிரகங்கள்,அதிக எண்ணிக்கையில் இருப்பது, ஏன் ஆச்சரியமாகப் பார்க்கப் படுகிறது?

தற்பொழுது ஏற்றுக் கொள்ளப் பட்ட கருத்தின் படி,முன் ஒரு காலத்தில்,விண் வெளியில்,இருந்த ராட்சத விண் மேகங்களானது,ஈர்ப்பு விசையால், தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,சுற்றி இருந்த தட்டையான பகுதிகளில் இருந்த தூசிகளும் வாயுக்களும், ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,கிரகங்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது.

குறிப்பாக, சூரியனுக்கு அருகில் அதீத வெப்ப நிலை நிலவியதாகவும்,அதனால்,சூரியனுக்கு அருகில்,குறைந்த அளவிலேயே வாயுக்களும்,தூசிகளும் இருந்ததாகவும்,அந்தத் தூசிகளும் வாயுக்களும், மெதுவாக உருண்டு திரண்டு,பூமி செவ்வாய் போன்ற சிறிய அளவிலான பாறைக் கிரகங்கள், நீண்ட காலத்தில், உருவானதாக நம்பப் படுகிறது.
அதே போன்று, சூரியனில் இருந்து அதிக தொலைவில் வெப்பம் குறைவாக இருப்பதால்,அந்தப் பகுதியில், அதிக அளவில் தூசிகளும் வாயுக்களும்,இருந்ததாகவும்,அந்தத் தூசிகளும் வாயுக்களும் பெரும் அளவில் திரண்டதால், வியாழன்,சனி போன்ற, பெரிய அளவிலான வாயுக் கோள கிரகங்கள், உருவானதாக நம்பப் படுகிறது.

இந்த முறையில், கிரகங்கள் உருவாக நீண்ட காலம் ஆகும் என நம்பப் படுகிறது.எனவே இந்த முறையானது, ஆமை முறை என்று அழைக்கப் படுகிறது.

இந்த முறையில், கிரகங்கள் உருவாக குறைந்த பட்சம், ஒரு கோடி முதல் பத்து கோடி ஆண்டுகள் ஆகலாம், என்று நம்பப் படுகிறது.

ஆனால், கடந்த அறுபது ஆண்டுகளில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளில்,நமது பால் வீதி நட்சத்திர மண்டலத்தில் மட்டும் பில்லியன் கணக்கில் கிரகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே,கிரகங்களானது விண் வெளியில்,அடிக்கடி நிகழக் கூடிய, மிக இயல்பான,செயல் முறை மூலம் உருவாகலாம், என்று தற்பொழுது நம்பப் படுகிறது.

எனவே,வியாழன் ,சனி போன்ற பெரிய அளவிலான வாயுக் கோளங்களானது ,காலப் போக்கில் உருண்டு திரண்டு உருவாகுவதற்குப் பதிலாக,தூசி மேகங்களில் ,ஈர்ப்பு விசையில், திடீரென்று சம நிலைக் குலைவு ஏற்பட்டு, குறைந்த கால கட்டத்தில்,உருவாகலாம் என்றும் நம்பப் படுகிறது.

ஆனால், இந்த இரண்டு முறையிலும், கிரகங்கள் உருவாக, அமைதியான சூழல் தேவை, என நம்பப் படுகிறது.

உதாரணமாக, நமது சூரியனானது மற்ற நட்சத்திரங்களில் இருந்து மிக தொலைவில் இருக்கிறது.குறிப்பாக நமது சூரியனுக்கு அருகில் இருக்கும்,நட்சத்திரமானது,நான்கு ஒளியாண்டு தொலைவில் இருக்கிறது.

இந்த நிலையில், விண்வெளியில்,நட்சத்திரங்கள் அருகருகே இருக்கும் நட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில்,இருக்கும் நட்சத்திரங்களை,வியாழன் போன்ற அளவில் இருக்கும் கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பது,ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது,விண்வெளியில்,நமது சூரியன் போன்ற நட்சத்திரங்கள் இருக்கும் பகுதியை விட,நூறு மடங்கு குறைவான இடப் பகுதியில்,நட்சத்திரக் கூட்டங்களில் இருக்கும்,நட்சத்திரங்கள் இருக்கின்றன.

எனவே,இது போன்ற நட்சத்திரக் கூட்டத்தின் மத்தியில், அதிக அளவில் வெப்பம் நிலவும்.அதே போன்று கோடிக் கணக்கான ஆண்டு காலத்தில்,நட்சத்திரங்களானது வயது முதிர்ந்து வெடிக்கும் சூழலும் ஏற்படும்.

அத்துடன், ஒரு நட்சத்திரத்துக்கு அருகில் மற்ற நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசையும் அதிகமாக இருக்கும்.

எனவே, இது போன்ற இட நெருக்கடி நிலவக் கூடிய,இடங்களில் எப்படி தூசிகளும் வாயுக்களும் திரண்டு கிரகங்களாக உருவாகின? என்பது விடை கூறப் படாத கேள்வியாக இருக்கிறது.

ஆனால் இந்தக் ஆச்சரியப் படுவதற்கு எதுவும் இல்லை.

ஏனென்றால், கிரகங்கள் எல்லாம்,நட்சத்திரங்களுக்குஉள்ளே நடைபெறும் அணுக் கரு வினையால் உருவாகும்,ஆக்சிஜன்,கார்பன்,சோடியம், சிலிக்கன்,பொட்டாசியம்,குளோரின் போன்ற கனமான வாயுக்களின் சேர்க்கையால் உருவாகுகின்றன.

இந்த நிலையில் இருக்கும் நட்சத்திரத்தின், வெளிப் பகுதியில் இருக்கும் வாயுக்களானது,அருகில் இருக்கும்,நட்சத்திரத்தின் வெப்பத்தால்,ஆவியாகும் பொழுது,ஆவியாக்கப் படும் நட்சத்திரத்திற்கு உள்ளே உருவான கிரகங்களானது, அருகில் இருக்கும் நட்சத்திரத்தை வலம் வரத் தொடங்குகின்றன.

எனவேதான், அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய, நட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில்,இருக்கும் நட்சத்திரங்களுக்கு அருகில், அதிக எண்ணிக்கையில், கிரகங்கள் உருவாகி இருக்கின்றன.
000000000000000
தூசித் தட்டுக் கொள்கைக்கு முரணாக இருக்கும் வேற்றுக் கிரகங்கள்..
கிரகங்கள் எவ்வாறு உருவாகுகின்றன?
ஒரு நட்சத்திரத்தின் வாயுமண்டலமானது இன்னொரு நட்சத்திரத்தால் ஆவியாக்கப் படும் பொழுது,ஆவியாக்கப் பட்ட நட்சத்திரத்தின் மையக் கோளம் மட்டும் எஞ்சிய நிலையில் கிரகமாக உருவாகிறது.

புதிதாகக் கண்டு பிடிக்கப் பட்ட வேற்று கிரகங்களின் சுற்றுப் பாதைகளானது ஆராய்ச்சியாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

அரிஸ்டாட்டில் காலத்தில் இருந்தே நமது சூரிய மண்டலம் போன்று விண்வெளியில் வேற்று கிரகங்கள் இருக்கக் கூடும் என்று நம்பப் பட்டு தேடப் பட்டது.

அத்துடன்,கிரகங்கள் எப்படி உருவாகின என்ற கேள்விக்கு விடை காண,விஞ்ஞானிகள் விண்வெளியில் தேடிய பொழுது,பல நட்சத்திரங்களைச் சுற்றி பெரும் அளவில் தூசியும் வாயுக்களும் சுழன்று கொண்டு இருப்பதைக் கண்டனர்.

அதன் அடிப்படையில்,நமது சூரியக் குடும்பத்தை மாதிரியாக வைத்து,ஒரு கருத்து உருவாக்கப் பட்டது.

அதன் படி,விண்வெளியில் இருக்கும் ராட்சத விண் மேகங்கள் சுருங்கித் தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,அதனைச் சுற்றி சுழன்று கொண்டு இருந்த தூசிகளும் வாயுக்களும் காலப் போக்கில் ஆங்காங்கே திரண்டு கிரகங்களாக உருவாகி இருக்கலாம் என்று நம்பப் பட்டது.

இந்தக் கருத்தின் படி,சூரியனுக்கு அருகில் இருக்கும் தூசிகளும் வாயுக்களும் ஆவியாகி விடும் என்பதால் கிரகங்கள் எல்லாம்,சூரியனில் இருந்து அதாவது மைய நட்சத்திரத்தில் இருந்து சற்று தொலைவிலேயே உருவாகும் என்று நம்பப் பட்டது.

இந்த நிலையில், கடந்த 1992 ஆம் ஆண்டில், போலந்து நாட்டைச் சேர்ந்த அலக்ஸ் சாண்டர் வோல்சான் என்பவர்,ஒரு வேற்று கிரகத்தைக் கண்டு பிடித்தார்.

ஆனால் அவரின் கண்டு பிடிப்பை அறிவியல் உலகம் ஏற்றுக் கொள்ள மறுத்தது.

ஏனென்றால் வோல்சான் கண்டு பிடித்த கிரகமானது நமது சூரியனை விட பல மடங்கு வெப்பமான கதிர் வீச்சை வெளியிடக் கூடிய நட்சத்திரமாக இருந்தது.

அத்துடன் அந்தக் கிரகமானது,அந்த அதிவெப்ப நட்சத்திரத்தை மிகவும் நெருக்கமாகவும் வலம் வந்து கொண்டு இருந்தது.

எனவே எப்படி ஒரு கிரகம் ஒரு அதிவெப்ப நட்சத்திரத்துக்கு மிக அருகில் உருவானது?முக்கியமாக எப்படி அந்த கிரகமானது அதிவெப்பச் சூழலில் ஆவியாகாமல், அந்த நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருக்கிறது? என்ற கேள்விகள் எழுந்தன.

இந்தக் கேள்விக்கு,டாக்டர் மார்க் குச்னர் என்ற விஞ்ஞானி.அந்த அதிவெப்ப நட்சத்திரத்துக்கு அருகில் வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களானது,பல கிலோ மீட்டர் ஆழத்துக்கு வைரப் படிகங்களால் ஆனா வைரக் கிரகங்களாக இருக்கும் என்று விளக்கம் கூறி இருந்தார்.

ஆனால் விண்வெளியில் வெற்றிடத்தில் எப்படி வைரம் உருவாக முடியும் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில்,விண்வெளியில் பல நட்சத்திரங்கள், அதன் அருகில் இருக்கும் நட்சத்திரங்களின் வாயு மண்டலத்தை, ஆவியாக்கிக் கொண்டு இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர்.

அத்துடன்,பிரிட்டிஷ் நாட்டு விஞ்ஞானிகள்,ஒரு எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் மையத்தில்,நிலாவை விடப் பெரிய அளவில் ஒரு வைரக் கோளப் படிகம் உருவாகி இருப்பதையும் கண்டு பிடித்தனர்.

இதன் அடிப்படையில் நான்,எரிந்து முடிந்த நட்சத்திரங்களுக்கு உள்ளேதான் கிரகங்கள் உருவாகின்றன என்பதைக் கண்டு பிடித்தேன்.

குறிப்பாக எரிந்து முடிந்த நிலையில் இருக்கும் நட்சத்திரங்களை அதி வெப்ப நட்சத்திரங்கள் கவர்ந்து இழுத்து அதன் வெளிப் பகுதி வாயு மண்டலத்தை ஆவியாக்கி விடும் பொழுது,எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் மையப் பகுதியில் உருவாகி இருந்த வைரக் கோளப் படிகங்களானது,வைரக் கிரகங்களாக அதி வெப்ப நட்சத்திரங்களை வலம் வருகின்றன என்று விளக்கம் கூறி இருந்தேன்.

அதன் அடிப்படையில்,நமது பூமி உள்பட,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்கள் மற்றும் அந்தக் கிரகங்களை வலம் வந்து கொண்டு இருக்கும் துணைக் கிரகங்கள் எல்லாம் எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் மையத்தில் உருவான பிறகு,சூரியனின் ஈர்ப்பு விசையால் கவர்ந்து இழுக்கப் பட்ட பொழுது,அதன் வெளிப் பகுதியில் இருந்த வாயுக்களானது விண்வெளியில் விசிறியடிக்கப் பட்ட பிறகு தற்பொழுது கிரகங்களாகவும் துணைக் கிரகங்களாகவும் வலம் வந்து கொண்டு இருக்கின்றன, என்று தெரிவித்து இருந்தேன்.

இந்த நிலையில்,புதிதாகக் கண்டு பிடிக்கப் பட்ட வேற்று கிரகங்கள் எல்லாம்,ஆராய்ச்சியாளர்களின் எதிர் பார்ப்புக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது.
ஏனென்றால்,ஆராய்ச்சியாளர்கள் தூசித் தட்டுக் கருத்தை நம்புகின்றனர்.

குறிப்பாக அந்தக் கருத்தின் படி,விண்வெளியில் இருக்கும் ராட்சத விண் மேகங்களானது,சுருங்கித் தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,அதனைச் சுற்றி சுழன்று கொண்டு இருந்த தூசிகளும் வாயுக்களும் காலப் போக்கில் ஆங்காங்கே திரண்டு கிரகங்களாக உருவாகி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

இதன் படி,சூரியன் அதாவது மைய நட்சத்திரமானது சுழன்று கொண்டு இருக்கும் அட்சிற்கு இணையாக, கிரகங்கள் சுற்றிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதுடன் அதே திசையில் வலம் வந்து கொண்டு இருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எதிர் பார்த்தனர்.

ஆனால் ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் முரணாகப் பல வேற்று கிரகங்கள் இருக்கின்றன,
அந்த வேற்று கிரகங்களின் சுழற்சிக்கு உரிய விளக்கத்தைக் கூற இயலாமல் ஆராய்ச்சியாளர்கள் குழம்பிக் கொண்டு இருக்கின்றனர்.

உதாரணமாக,நமது சூரிய மண்டலத்திலேயே,வெள்ளி கிரகமானது,சூரியன் சுற்றிக் கொண்டு இருக்கும் திசைக்கு எதிர் திசையில் சுழன்று கொண்டு இருக்கிறது.

அதாவது வெள்ளி கிரகமானது,பூமி உள்பட மற்ற கிரகங்களைப் போல் அல்லாது,கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி சுழன்று கொண்டு இருக்கிறது.

இவ்வாறு வெள்ளி கிரகமானது,சூரியனின் சுழற்சி திசைக்கு எதிர் திசையில் சுழன்று கொண்டு இருப்பதற்கு,முன் ஒரு காலத்தில் வெள்ளி கிரகத்தின் மேல் ஒரு கிரகம் மோதியதே காரணம் என்று நம்பப் படுகிறது.

ஆனால் எனது கருத்தின் படி வெள்ளிக் கிரகமானது சூரியனால் ஈர்க்கப் பட்ட ஒரு கிரகம்,எனவே வெள்ளிக் கிரகமானது எந்தத் திசையில் வேண்டுமானாலும் சுழன்று கொண்டு இருக்கலாம்.

உதாரணமாகக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை ஒரு கயிற்றின் உதவியுடன் மேலே இழுக்கும் பொழுது,அவன் வலப் புறமாகவோ அல்லது இடப் புறமாகவோ சுழன்றபடி மேலே வரலாம்.

அதே போன்று,சூரியனால் ஈர்க்கப் பட்ட கிரகமும்,எந்தத் திசையில் வேண்டுமானாலும் சுழன்றபடி சூரியனைத் தொடரலாம்.

குறிப்பாகத் தூசித் தட்டுக் கருத்தின் படி,சூரிய மண்டலக் கிரகங்கள் மற்றும் அதன் துணைக் கிரகங்கள் எல்லாமே,ஒரே அமைப்பாக உருவாகி,ஆரம்பத்தில் இருந்தே சூரியனுடன் இருப்பதாக நம்பப் படுவதால் சூரிய மண்டலத்தை சூரியக் குடும்பம் (solar family) என்றும் , சூரிய அமைப்பு (solar system )என்றும் அழைக்கப் படுகிறது.

ஆனால் எனது கருத்தின் படி சூரிய மண்டலக் கிரகங்கள் மற்றும் அதன் துணைக் கிரகங்கள் எல்லாமே,அவ்வப் பொழுது,சூரியனால் ஈர்க்கப் பட்டதால் சூரியனுடன் சேர்ந்து கொண்டது.

எனவே எனது கருத்தை ,இணைக்கப் பட்ட (solar assembly )அல்லது திரட்டப் பட்ட, கிரக மண்டலம் என்று அழைக்கலாம்.

குறிப்பாக சூரியனின் பயணத்தின் பொழுது,சூரியனுக்கு அருகில் வந்ததால் சூரியனால் ஈர்க்கப் பட்டவைகள்,எனவே எல்லாக் கிரகங்களும் சூரியனின் சுழல் திசைக்கு இணையாக சுழல வேண்டும்,வலம் வர வேண்டும், என்ற அவசியம் இல்லை.

அதே போன்று,தூசித் தட்டுக் கருத்தின் படி,சூரியனின் மையப் பகுதிக்கு இணையான தளத்திலேயே (equator),எல்லாக் கிரகங்களும் வலம் வந்து கொண்டு இருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எதிர் பார்த்தனர்.

ஆனால் ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் முரணாக,சூரியனால் வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்கள் ஒவ்வொன்றும்,சூரியனின் மையப் பகுதிக்கு (equator),முரணான கோணத்தில் ,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது.

உதாரணமாக சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கிரகமானது,சூரியனை பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து,ஏழு டிகிரி சாய்வான தளத்தில் இருந்தபடி, சூரியனை வலம்
 வந்து கொண்டு இருக்கிறது.
அதே போன்று,சூரியனுக்கு தொலைவில் இருக்கும் புளூட்டோவானது, சூரியனை பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து,பதினேழு டிகிரி சாய்வான தளத்தில் இருந்தபடி, சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது.

இவ்வாறு சூரிய மண்டலக் கிரகங்களானது,சூரியனைச் சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு, சூரிய மண்டலத்தின் வெளிப் பகுதியில் இருந்தபடி,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும்,பூமியை விடப் பத்து மடங்கு அதிக எடையுள்ள ஒரு கிரகத்தின் ஈர்ப்பு விசையே காரணம் என்று,ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

ஆனாலும் இன்று அந்தக் கிரகமானது கண்டுபிடிக்கப் படவில்லை.

இந்த நிலையில்,புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்ட வேற்று கிரகங்களின் சுழற்சியும்,சுற்றுப் பாதையும் கூட,ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் முரணாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

உதாரணமாகக் கடந்த 1995 ஆம் ஆண்டு,முதன் முதலாக நமது சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருந்த வேற்று கிரகத்தைத் தொலை நோக்கியில் பார்த்ததும் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏனென்றால்,51 –b பெகாசிஸ் என்று பெயர் சூட்டப் பட்ட அந்த கிரகமானது,அதன் நட்சத்திரத்தை மிக நெருக்கமாக அதாவது,சூரியனை புதன் கிரகம் வலம் வந்து கொண்டு இருக்கும் தொலைவைக் காட்டிலும்,எட்டு மடங்கு குறைவான தொலைவில்,அதன் நட்சத்திரத்தை,நான்கு நாட்களுக்கு ஒரு முறை என தலை தெறிக்கும் வேகத்தில் வலம் வந்து கொண்டு இருந்தது.

குறிப்பாக அந்தக் கிரகமானது நமது சூரிய மண்டலத்தில் இருக்கும் வியாழன் போன்ற கிரகத்தின் அளவுடனும்,அதன் நட்சத்திரத்துக்கு அருகில் இருந்ததால் அதிக வெப்பத்துடனும் இருந்தது.

எனவே அந்தக் கிரகமானது வெப்ப வியாழன் என்று அழைக்கப் பட்டது.

பின்னர் இதே போன்று பல நட்சத்திரங்களை வெப்ப வியாழன்கள் வலம் வந்து கொண்டு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.

தூசித் தட்டுக் கருத்தின் படி,அந்த அளவுக்கு, ஒரு நட்சத்திரத்திற்கு அருகில்,தூசிகள் மற்றும் வாயுக்கள் இருக்கவோ அவைகள் திரண்டு ஒரு கிரகமாக உருவாகவோ சாத்தியமில்லை.

எனவே,வெப்ப வியாழன்கள் அதன் நட்சத்திரத்தில் இருந்து அதிக தொலைவில் உருவாகிய பிறகு,அதன் நட்சத்திரத்துக்கு அருகில் இடம் பெயர்ந்து இருக்கலாம் என்று கருதப் பட்டது.

இந்தக் கருத்தானது இடப் பெயர்ச்சி கொள்கை (migration theory ) என்றும் அழைக்கப் படுகிறது.

ஏன் இவ்வாறு கிரகங்கள் இடம் பெயர வேண்டும்? என்ற கேள்வி எழுந்தது.

இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் வண்ணம்,ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி இருந்த தூசிகள் மற்றும் வாயுக்கள் சுழன்று கிரகமான உருவான பொழுது,அந்தத் தூசித் தட்டின் சுழற்சி வேகத்தில்,சுருங்கிய பொழுது, வெப்ப வியாழன்களானது,அதன் நட்சத்திரத்தை நோக்கி இடம் பெயர்ந்தது என்று,நம்பப் படுகிறது.

இந்தக் கருத்தின் படி,வெப்ப வியாழன்களானது,மைய நட்சத்திரத்தின் சுழல் அச்சுக்கு இணையாக,அதன் நட்சத்திரங்களை வலம் வந்து கொண்டு இருக்க வேண்டும்.

இந்த நிலையில்,பூமியில் இருந்து 568 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் ஒரு நட்சத்திரத்தை,வியாழன் கிரகத்தைப் போன்று பத்து மடங்கு எடையுள்ள ஒரு பெரிய கிரகமானது,மூன்றரை நாளுக்கு ஒரு முறை,சுற்றி வந்து கொண்டு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

xo-3 b என்று பெயர் சூட்டப் பட்ட, அந்தக் கிரகமானது,அதன் நட்சத்திரத்தின் சுழல் அச்சுக்கு, 37 டிகிரி கோணத்தில்,அதன் நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனை வெப்ப வியாழன்களின் இடப் பெயர்ச்சி கருத்தின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் தெரிவிக்க இயலவில்லை.

இதே போன்று, பூமியில் இருந்து ஆயிரம் ஒளியாண்டு தொலைவில் இருக்கும் ஒரு நட்சத்திரத்தை,வியாழன் கிரகத்தைப் போன்று ஒன்றரை மடங்கு எடையுள்ள ஒரு பெரிய கிரகமானது,இரண்டு நாளுக்கு ஒரு முறை, வலம் வந்து வந்து கொண்டு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

HAT-P-7, என்று பெயர் சூட்டப் பட்ட, அந்தக் கிரகமானது,அதன் நட்சத்திரத்தின் சுழல் அச்சுக்கு, 180 டிகிரி கோணத்தில்,அதன் நட்சத்திரத்தை சுற்றிக் கொண்டு இருக்கிறது.

இன்னொரு ஆய்வில்,இதே கிரகமானது,அதன் நட்சத்திரத்தின் சுழல் அச்சுக்கு, 86 டிகிரி கோணத்தில்,அதன் நட்சத்திரத்தை சுற்றிக் கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அதாவது, HAT-P-7, கிரகமானது,தூசித் தட்டுக் கருத்திற்கு முற்றிலும் முரணாக, அதன் நட்சத்திரத்தின், துருவத்திற்கு இணையாக,அதன் நட்சத்திரத்தை சுற்றிக் கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு வேற்று கிரகங்களானது அதன் நட்சத்திரங்களை வெவ்வேறு கோணத்தில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,அந்தக் கிரகங்களை வேறு ஒரு கிரகமானது மோதித் தள்ளி முரணான சுற்றுப் பாதைக்குத் தள்ளி இருக்கலாம் என்று கருதப் பட்டது.

இந்த நிலையில் பல வேற்று கிரகங்களானது அதன் நட்சத்திரங்களை,அந்த நட்சத்திரங்களின் சுழல் அச்சுக்கு முரணான கோணத்தில் வலம் வந்து கொண்டு இருப்பது தெரிய வந்திருப்பது ஆராய்ச்சியாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இதுநாள் வரை நமது சூரியமண்டலமானது பொதுவான மாதிரியாகவும்,மற்ற வேற்றுக் கிரகக் குடும்பங்கள் எல்லாம்,வித்தியாசமான அமைப்பாகவும் கருதப் பட்டது.

இந்த நிலையில், தற்பொழுது,கண்டுபிடிக்கப் பட்ட வேற்று கிரகங்களில் பல வேற்றுக் கிரகங்களானது,அதன் நட்சத்திரத்தின் சுழல் அச்சுக்கு முரணான கோணத்தில் வலம் வந்து கொண்டு இருப்பது தெரிய வந்து இருக்கிறது.

எனவே ,தற்பொழுது மற்ற வேற்று கிரகங்களானது பொதுவான அமைப்பாகவும், நமது சூரியக் குடும்பமானது, வித்தியாசமான அமைப்பாகவும் இருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
ஆனால் எனது ஈர்க்கப் பட்ட கிரகங்களின் கருத்தின் படி,மைய நட்சத்திரத்திற்கு மிக நெருக்கமாக வியாழன் போன்ற கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பததும்,அதே போன்று,மைய நட்சத்திரத்தின் சுழல் அச்சில் இருந்து,வேறு கோணத்தில் வெப்ப வியாழன்கள் வலம் வந்து கொண்டு இருப்பதும்,நிகழக் கூடிய ஒன்றே.

ஏனென்றால் எனது கருத்தின் படி, சூரிய மண்டலத்தின் கிரகங்கள் எல்லாமே சூரியனால் ஈர்க்கப் பட்டவைகளே.

அதாவது சூரியன் பயணம் செய்து கொண்டு இருக்கும் வழியில்,அக்கம் பக்கமாகச் சென்று கொண்டு இருந்த எரிந்து முடிந்த நிலையில் இருந்த நட்சத்திரங்களையே சூரியன் ஈர்த்து இருக்கிறது.

எனவே எந்தத் திசையில் இருந்தும் கிரகங்களானது ஈர்க்கப் பட சாத்தியம் இருக்கிறது.
00000000000000000
மண்ணிலிருந்து விண்ணுக்கு
இந்தப் பூமியானது, விண்வெளியில் வினாடிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் பயணம் செய்து கொண்டு இருந்தாலும் கூட,நம்மால் அதை உணர முடிவதில்லை.

எனவே, இந்தப் பூமியானது, அசையாமல் நிலையாக இருக்கிறது என்று, ஆதி காலத்தில் அரிஸ்டாட்டில் முதலானோர் நினைத்ததில் வியப்பேதும் இல்லை.

அத்துடன், காலையில் சூரியன் கிழக்கு திசையில் உதயமாகி,வானில் மேல் நோக்கி உயர்ந்து,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,மாலையில் கீழ் வானில் மறைகிறது.

அதன் அடிப்படையில்,பூமி நிலையாக இருப்பதாகவும்,சூரியன்தான் பூமியை சுற்றிக் கொண்டு இருப்பதாகவும் நம்பப் பட்டது.

அதே போன்று,கிரகங்களும் கூட சூரியனைப் போலவே,இரவில், கிழக்கு திசையில் இருந்து, மேற்கு திசையை நகர்ந்து கொண்டு இருப்பதன் அடிப்படையில்,பூமிதான் இந்தப் பிரபஞ்சத்தின் மையம் என்றும்,சூரியன்,நிலா உள்பட எல்லா கிரகங்களும் பூமியை மையமாகக் கொண்டு சுற்றி வருகிறது என்றும் நம்பப் பட்டது.

மத நூல்களிலும் இதே கருத்து இடம் பெற்றது.

இந்த நிலையில், பொருள்களின் இயக்கம் பற்றி அரிஸ்டாட்டில் யோசித்தார்.

பொருள்கள் நிலையாக அசைவின்றி இருப்பதுதான் இயல்பான நிலை, என்றும், அதனை அசைக்கும் பொழுது,பொருள்கள் சிறிது நகர்ந்து சென்ற பிறகு, மறுபடியும் ஓய்வு நிலையை, அதாவது இயல்பு நிலையை அடைகிறது.என்றும் அரிஸ்டாட்டில் யோசித்தார்.

இதே போன்று,ஒரு காலத்தில் சூரியனும் நிலாவும் கூட அசைவின்றி இருந்த பிறகு, கடவுள் அதனை முடுக்கிய பிறகு, எல்லாம் கடவுளின் சித்தப் படி, முன் கூட்டியே திட்டமிட்ட படி,கட்சிதமாக இயங்கிக் கொண்டு இருக்கிறது என்றும் நம்பப் பட்டது.

பூமியையும் அதில் மனிதனையும் கடவுள் படைத்ததாக நம்பப் பட்டதால், பூமிதான் பிரபஞ்சத்தின் மையம் என்று நம்பப் பட்டது.

காலப் போக்கில், விவசாயத்தில் நல்ல விளைச்சல் ஏற்படுவதற்கும் இயற்கைக்கும் இருக்கும் தொடர்பு அறியப் பட்டது.பருவ காலங்கள் சீராக மாறிவருவது அறியப் பட்டது.

இதன் தொடர்ச்சியாக, மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுக்கும், கிரகங்களின் இடமாற்றதுக்கும், தொடர்பு இருப்பதாக நம்பப் பட்டது.

எனவே, கிரகங்களின் இயக்கத்தைக் கணிப்பதில் அதிக ஆர்வம் எழுந்தது.குறிப்பாக இரவில் பின் புல நட்சத்திரங்களுக்கு இடையில் கிரகங்கள் நகர்ந்து கொண்டு இருப்பது கவனிக்கப் பட்டது.

ஆனாலும் பூமியை மையமாகக் கொண்டு சூரியன் ,சந்திரன் மற்றும் கிரகங்கள் சுற்றி வரும் கொள்கையின் அடிப்படையில், கிரகங்களின் இடத்தைத் துல்லியமாகக் கணிக்க முடியாமல் இருந்தது.

இந்த விஷயத்தில் கவனம் செலுத்திய கோப்பர் நிகஸ் என்ற விஞ்ஞானி ,பூமி உள்பட் எல்லாக் கிரகங்களும்,சூரியனை மையமாகக் கொண்டே வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதை அறிந்தார்.

ஆனால் இந்தக் கருத்தானது மதக் கருத்துக்களுக்கு முரணாக இருந்ததால்,வெளியிட அஞ்சினார்.ஆனாலும் தனது விளக்கத்தை புத்தகமாக வெளியிட்டார்.

ஆனாலும், அந்தக் காலத்தில் அவ்வளவு பரவலாகப் பேசப் படாத இலத்தீன் மொழியில் அந்த நூல் இருந்ததால்,அவரின் விளக்கமானது பொது மக்களிடையே அவ்வளவாகப் பரவவில்லை.

இருந்தாலும்,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டைகோ பிராகே என்பவர்,கோப்பர் நிகசின் கருத்தை பொய்யென நிரூபிப்பதற்காக ,அரசரிடம் உதவி பெற்று,ஒரு தேவாலயத்தின் கோபுரத்தின் மேல் இருந்தபடி தினமும் இரவில்,பின்புல நட்சத்திரங்களுக்கு இடையில் நகர்ந்து செல்லும் கிரகங்களின் இடங்களைக் குறித்துப் பதிவேடுகள் தயார் செய்தார்.

அப்பொழுது,அவர், செவ்வாய் கிரகமானது,கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,அதன் வேகம் சிறிது குறைவதும்,பின்னர் நிலையாக நின்ற பிறகு, மறுபடியும் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்த பிறகு, மறுபடியும் மேற்கு திசையை நோக்கி நகர்வதை அறிந்தார்.

இவ்வாறு, செவ்வாய்க் கிரகமானது கிழக்கு திசையை நோக்கி நகரும் பொழுது, சிறிது தயங்கி நின்ற பிறகு, மறுபடியும் கிழக்கு திசையில் நகர்ந்த பின்னர், பழையபடி மேற்கு திசையை நோக்கி நகர்வதற்கு காரணம் என்ன என்று டைகோ பிராகே யோசித்தார்.

ஆனால் அந்த நிகழ்வுக்கு அவரால் காரணம் கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் அவரிடம் ,ஜோகன்னஸ் கெப்ளர் என்ற இளைஞர் உதவியாளர் பணிக்கு சேர்ந்தார்.

கெப்ளர்,கோப்பர் நிகசின் சூரிய மையக் கோட்பாட்டின் மேல் நம்பிக்கை கொண்டவர்.

டைகோ பிராகே திடீரென்று இறந்ததும் அவர் தயாரித்த ஆவணங்கள் எல்லாம் கெப்ளரின் கைக்கு வந்தது.

அதனை ஆய்வு செய்த கெப்ளர்,கோள்கள் எல்லாம் சூரியனை,ஒரு முனையில் குவியமாகக் கொண்டு , நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதை அறிந்தார்.

அதற்கு முன்பு எல்லோரும், கோள்கள் எல்லாம், வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதாக நம்பினார்கள்.

அவ்வாறு கிரகங்கள் சூரியனை ,வெவ்வேறு நீள் வட்டப் பாதையில், வலம் வரும் பொழுது,குறிப்பாக நீள் வட்டப் பாதையில், வளையும் இடத்தில்,பூமியும் செவ்வாயும் ஒன்றையொன்று முந்துவதால்,பூமியில் இருந்து பார்ப்பதற்கு, செவ்வாய் கிரகமானது முதலில் முந்துவதைப் போன்று சென்ற பிறகு, பின்தங்குவதை அறிந்து கொண்டார்.
 

அத்துடன், கிரகங்கள் எல்லாம்,சூரியனை நெருங்கும் பொழுது வேகமாகவும்,சூரியனை விட்டு விலகி தொலைவுக்கு சென்ற பிறகு மெதுவாகவும் செல்வதையும்,கெப்ளர் அறிந்தார்.

ஆனால் ஏன் அவ்வாறு கிரகங்கள் சூரியனைச் சுற்றுகிறது, என்று கெப்ளர் அறிந்திருக்கவில்லை.

இந்த நிலையில், கலிலியோ தொலைநோக்கி மூலம் கோள்களை ஆராய்ந்தார்.அப்பொழுது அவர் நிலவைப் போலவே,வெள்ளி கிரகத்திற்கும் பிறைகள் தோன்றி வளர்வதை அறிந்தார்.

இதன் அடிப்படையில், வெள்ளிக் கிரகமானது,சூரியனை மையமாகக் கொண்டு வலம் வந்து கொண்டு இருப்பதைப் புரிந்து கொண்டார்.அதே போன்று எல்லாக் கிரகங்களும், சூரியனையே வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டார்.

இந்தக் கருத்தைக் கூறியதற்காக, அவர் மதக் கோட்பாட்டாளர்களால் வீட்டுச் சிறையில் வைக்கப் பட்டு,இறுதிக் காலத்தில் மருத்துவ உதவிகள் கூட மறுக்கப் பட்ட நிலையில், பார்வையிழந்த நிலையில் உயிரிழந்தார்.

கலிலியோ மேலும் பல சோதனைகளைச் செய்து அரிஸ்டாடிலின் கருத்தைத் தகர்த்தார்.

குறிப்பாக,அரிஸ்டாட்டில்,அதிக எடையுள்ள பொருள் வேகமாகவும்,குறைந்த எடையுள்ள பொருள்கள் மெதுவாகவும் விழும் என்று கூறியிருந்தார்.

ஆனால் கலிலியோ ஒரு சாய்வான மரப் பலகையில்,வெவ்வேறு திடமுள்ள கோளங்களை உருளச் செய்து, அந்தக் கோளங்கள் ஒரே நேரத்தில் தரையை வந்தடைவதை எடுத்துக் காட்டினார்.

அதன் அடிப்படையில், எல்லாப் பொருள்களும் ஒரே வேகத்தில்தான், பூமியை வந்தடையும் என்பதை எடுத்துக் காட்டினார்.

ஆனால் ஏன் அவ்வாறு பொருள்கள் பூமியை நோக்கி நகர்கின்றன என்று அவர் யோசிக்க வில்லை.

இந்த நிலையில், நியூட்டன், பொருளின் இயல்பு நிலை பற்றி,அரிஸ்டாட்டில் கூறியதற்கு முற்றிலும் முரணாக விளக்கத்தைக் கூறினார்.

உதாரணமாக, ஒரு இடத்தில் இருக்கும் பந்தை ஒருவர் தள்ளி விட்டால் அந்தப் பந்தானது நகர்ந்து சென்ற பிறகு இறுதியில் ஒரு இடத்தில் நின்று விடும்.அதாவது இயல்பு நிலையை அடையும்.என்று அரிஸ்டாட்டில் கருதினார்.

ஆனால் நியூட்டன் அரிஸ்டாடிலின் கருத்துக்கு மாறாக,இயங்கிக் கொண்டு இருக்கும் ஒரு பொருளின் மேல் புற விசை ஒன்று செயல்படாத வரையில் அந்தப் பொருளானது தொடர்ந்து அதே வேகத்தில்,அதே திசையில் சென்று கொண்டு இருக்கும் என்று கூறினார்.
 
மற்றபடி ஓடும் பந்தை நிறுத்துவது, உராய்வு போன்ற தடைதான் காரணம் என்பது நியூ ட்டனின் விளக்கம்.

இந்த நிலையில்,ஐசக் நியூட்டன் வால் நட்சத்திரங்களை ஆராய்ந்தார்.

அப்பொழுது ஒரு வால் நட்சத்திரமானது,சூரியனுக்குப் பின்னால் மறைந்த பிறகு மறபடியும் வானில் எழுந்து நகர்ந்ததைக் கண்டார்.

அதன் அடிப்படையில் சூரியனுக்கு ஈர்ப்பு சக்தி இருப்பதைப் புரிந்து கொண்டார்.

அதே போன்று பூமிக்கு ஈர்ப்பு சக்தி இருப்பதையும் நியூட்டன் புரிந்து கொண்டார்.

அதன் அடிப்படையில், கிரகங்கள் சூரியனைச் சுற்றிக் கொண்டு இருப்பதற்கும்,நிலவானது பூமியைச் சுற்றிக் கொண்டு இருப்பதற்கும், ஈர்ப்பு சக்தியே காரணம் என்பதை நியூட்டன் அறிந்து கொண்டார்.

எனவே, ஏன் நிலா பூமியின் மேல் விழ வில்லை என்று நியூட்டன் யோசித்தார்.

அப்பொழுது,ஒரு மலையின் மேல் இருக்கும் ஒரு பீரங்கியில் இருந்து வேகமாகச் செல்லும் குண்டானது அருகில் விழும்,ஆனால் அந்தக் குண்டின் வேகத்தை அதிகரிக்க அதிகரிக்க, அந்தக் குண்டானது அதிக தொலைவுக்கு பயணம் செய்து
 விழும்.
இந்த நிலையில்,மலையின் உயரமும், குண்டின் வேகமும் மென்மேலும் அதிகரிக்கும் பொழுது,ஒரு கட்டத்தில் அந்தக் குண்டானது,பூமியில் விழாமல்,பூமியை சுற்ற ஆரம்பித்து விடும்,என்றும் அதே போலதான் நிலவும் பூமியை சுற்றிக் கொண்டு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்.

அதன் அடிப்படையில்,நேராகச் செல்லும் நிலாவை, பூமியின் ஈர்ப்பு வியையானது, தொடர்ந்து இழுப்பதால்,நிலவானது பூமியைச் சுற்றிக் கொண்டு இருக்கிறது என்று விளக்கம் கூறினார்.

இந்த நிலையில், கிரகங்களின் இடங்களை, ஓரளவு துல்லியமாகக் கணிக்க முடிந்தது,குறிப்பாக ஒரு கிரகம் எந்த நேரத்தில் எங்கு இருக்கும் என்று துல்லியமாக அறிய முடிந்தது.

எனவே கிரகங்கள் ஏன் சூரியனை வட்டப் பாதையில் சுற்றாமல், நீள் வட்டப் பாதையில் சுற்றுகிறது என்ற கேள்வி எழுந்தது.

இந்தக் கேள்விக்கு நியூட்டன்,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையின் காரணமாகக் கிரகங்கள் சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன என்று விளக்கம் கூறினார்.

ஆனாலும் புதன் கிரகத்தின் இயக்கத்தை கணிப்பதில் சிரமம் இருந்தது.அதாவது புதன் கிரகமானது எப்பொழுது எங்கே இருக்கும் என்று கணித்துச் சொல்ல முடியாமல் இருந்தது.

அத்துடன் புதன் கிரகமானது, ஒவ்வொரு முறையும்,சூரியனைச் சுற்றி வந்த பிறகு,புறப்பட்ட இடத்திற்கு வராமல் சிறிது இடம் மாறியது.

அதாவது,புதன் கிரகமானது சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கும் நிலையில்,புதன் கிரகமானது சூரியனை நெருங்கும் புள்ளியானது ஒவ்வொரு சுற்றுக்கும் சிறிது இடம் மாறியது.

வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், புதன் கிரகமானது சூரியனை ஒரு பூவின் இதழைப் போன்று சுற்றிக் கொண்டு இருந்தது.

அதாவது புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையே சூரியனைச் சுற்றிக் கொண்டு இருந்தது.

அத்துடன் புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையும், எதிர்ப்பார்த்ததை விட அதிகமாக இருந்தது.

இவ்வாறு,புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது மிகவும் நீளமாக இருப்பது ஏன் என்ற கேள்விக்கு, நியூட்டனால் விளக்கம் கூற இயலவில்லை.

அதே போன்று,புதன் கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது ஏன் சூரியனைச் சுற்றுகிறது, என்ற கேள்விக்கும் நியூட்டனால் விளக்கம் கூற இயலவில்லை.

இந்தப் புதிருக்கு ஐன்ஸ்டீன் ஒரு விளக்கத்தை கூறினார்.

அதாவது,ஈர்ப்பு என்பது,நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசை அல்ல,மாறாக,ஈர்ப்பு என்பது விண்வெளியில் சூரியன் போன்ற பொருள்களின் நிறையால்,விண்வெளியானது வளைக்கப் படுகிறது.அதனால்,சூரியனுக்கு அருகில் ஒரு பெரிய பள்ளம் உருவாகிறது.

------------------------------------
ஐன்ஸ்டீன் கூறிய விளக்கம் தவறு.
ஈர்ப்பு என்பது நியூட்டன் கூறியது போன்று ஒரு விசையே அல்ல என்றும்,ஈர்ப்பு என்பது,சூரியன் மற்றும் கிரகங்களால் விண்வெளியானது வளைக்கப் படும்பொழுது ஏற்படும் ஒரு விளைவு என்று ஐன்ஸ்டீன் , ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.
இது முற்றிலும் தவறான விளக்கம் ஆகும்.
ஏனென்றால்,தற்பொழுது விண்வெளியின்,நமது சூரியனைப் போலவே,இருக்கும் பல நட்சத்திரங்களை,கண்ணுக்குத்
 தெரியாத சிறிய கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பதை,அந்தக் கிரகங்களின் '' ஈர்ப்பு விசையின் காரணமாக'' அந்த நட்சத்திரங்களில்,குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் அசைவுகள் மூலம்,விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதன் மூலம்,ஈர்ப்பு என்பது,நியூட்டன் கூறியதைப் போன்று ஒரு விசை என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

------------------------------------

அந்தப் பள்ளத்தைக்கு உள்ளே கிரகங்கள் பயணம் செய்வதால்,கிரகங்களின் பாதையானது வளைக்க படுவதால்,சூரியனைக் கிரகங்கள் நீள்வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன,என்று ஐன்ஸ்டீன் ஒரு புதிய விளக்கத்தை கூறினார்.

உதாரணமாக ஒரு பெரிய ரப்பர் மெத்தையின் மேல் ஒரு இரும்புக் குண்டை வைத்தால் அந்த ரப்பர் மெத்தையில் ஒரு பெரிய பள்ளம் உருவாகும்.

இந்த நிலையில் அந்த பள்ளத்தில், சில கோலிக் குண்டுகளை உருட்டி விட்டால் அந்தக் கோலிக் குண்டுகளானது,அந்தப் பெரிய இரும்புக் குண்டை வலம் வரும் பொழுது,புறப்பட்ட இடத்துக்கே திரும்ப வராமல், சிறிது இடம் மாறி வருவதைப் போன்று, கிரகங்களும் இயங்குகின்றன, என்று ஐன்ஸ்டீனின் கருத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ளப் படுகிறது.

ஐன்ஸ்டீன் கூறியதைப் போன்று உண்மையில்,சூரியனுக்கு அருகில் விண்வெளியானது வளைக்கப் பட்டு இருக்கிறதா என்பதை எப்படி அறிய முடியும் என்ற கேள்வி எழுந்தது.

உண்மையில் ஐன்ஸ்டீன் கூறியதைப் போன்று,சூரியனுக்கு அருகில் இருக்கும் விண்வெளியானது,வளைக்கப் பட்டு,சூரியனைச் சுற்றி ஒரு பெரிய பள்ளம் உருவாகி இருந்தால்,சூரியனுக்குப் பின்னால் இருக்கும் நட்சத்திரத்தின் ஒளியானது,அந்தப் பள்ளத்தைக் கடந்து வரும் பொழுது வளைந்து வரும்,எனவே சூரியனுக்குப் பின்னால் ஒரு நட்சத்திரம் இருந்தாலும் கூட, அந்த நட்சத்திரத்தைக் காண முடியும் என்று விளக்கம் கூறப் பட்டது.

பகல் நேரத்தில்,வெளிச்சம் காரணமாகச் சூரியனுக்கு அருகில் இருக்கும் நட்சத்திரத்தைக் காண இயலாது. எனவே முழு சூரிய கிரகணத்தின் பொழுது,சூரியனுக்குப் பின்புறம் இருக்கும் நட்சத்திரத்தைக் காண முடியும் என்று கருதப் பட்டது.

ஐன்ஸ்டீனின் கருத்தை நிரூபிப்பதற்காக, கடந்த 1919 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூரிய கிரகணத்தன்று,சூரியனுக்குப்
 பின்புறம் இருக்கும் நட்சத்திரத்தைப் படம் பிடிக்க முடிவு செய்யப் பட்டது.

இந்த சோதனையை, ஆர்தர் எடிங்க்டன் என்பவர் தலைமையில் மேற்கொள்ளப் பட்டது.

திட்டமிட்டபடியே சூரிய கிரகணம் ஏற்பட்ட பொழுது,எடுக்கப் பட்ட படத்தில் சூரியனுக்கு அருகில் இருந்த நட்சத்திரங்களுடன்,சூரியனுக்குப் பின்புறம் இருந்த நட்சத்திரமும் படத்தில் பதிவாகி இருந்தது.

உடனே ஐன்ஸ்டீனின் விளக்கம் நிரூபிக்கப் பட்டதாக, உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப் பட்டது.

இந்த நிலையில் தற்பொழுது,சூரியனுக்குப் பின்னால் இருந்த நட்சத்திரங்கள் தெரிந்ததற்கு ஒளி விலகல்தான் காரணம் என்றும் ,ஒளி விலகல் பற்றி ஐன்ஸ்டீன் அறிய வில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

அதாவது ஐன்ஸ்டீனின் விளக்கத்தை நிரூபிப்பதற்காக மேற்கொள்ளப் பட்ட பரிசோதனையே தவறு என்று, விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

எனவே கிரகங்கள் ஏன் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது.

கிரகங்கள் ஏன் சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்றன?
என்ற கேள்விக்கு, நியூட்டன்,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையே காரணம் என்று விளக்கம் கூறினார்.

எனது விளக்கம்.

பூமி உள்பட எல்லாக் கிரகங்களும் சூரியனை, ஒரே சீரான நீள் வட்டப் பாதையில், குறிப்பிட்ட காலத்தில் சுற்றிக் கொண்டு இருக்கின்றன.

இந்த நிலையில், ஒரு கிரகத்தின் நீள் வட்டப் பாதைக்கு மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையானது காரணம் என்றால்,கிரகங்களின் நீள் வட்டப் பாதையானது, நாளுக்கு நாள்,மாதத்துக்கு மாதம் ஆண்டுக்கு ஆண்டு மாற வேண்டும்.

ஏனென்றால் கிரகங்களின் நிலையானது, நாளுக்கு நாள்,மாதத்துக்கு மாதம் ஆண்டுக்கு ஆண்டு இடம் மாறுகிறது.

ஆனால் அவ்வாறில்லாமல், பூமி உள்பட எல்லாக் கிரகங்களும் சூரியனை, ஒரே சீரான நீள் வட்டப் பாதையில், குறிப்பிட்ட காலத்தில் சுற்றிக் கொண்டு இருக்கின்றன.

எனவே,கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை காரணம் என்று நியூட்டன் கூறிய விளக்கம் தவறு.

மாறாக, சூரியனின் முன் நோக்கிய நகர்வே,கிரகங்களின் நீள்வட்டப் பாதைக்குக் காரணம்.

எப்படி என்றால், ஒரு கிரகமானது சூரியனை சுற்றிவிட்டுத் திரும்பும் பொழுது,சூரியனானது முன் நோக்கி நகர்ந்து விடுகிறது.

எனவே,சூரியனைச் சுற்றி விட்டு நகர்ந்த கிரகமானது,மறுபடியும் சூரியனை நெருங்க வேண்டும் என்றால்,அதிக தொலைவு பயணம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறது.

இதன் காரணமாகச் சூரியனைச் சுற்றும் கிரகங்களின் பாதையானது, நீள் வட்டப் பாதையாக மாறி விடுகிறது.

இந்த நிலையில், சூரியனானது விண்வெளியின் நேர்கோட்டுப் பாதையில் பயணம் செய்யாமல்,பால்வீதி நட்சத்திர மண்டலத்தைச் சுற்றி சற்று வளைவான பாதையில் பயணம் செய்து கொண்டு இருக்கிறது.

இவ்வாறு, சூரியன் விண்வெளியின் வளைவான பாதையில் பயணம் செய்து கொண்டு இருப்பதால்,சூரியனைச் சுற்றும் கிரங்களானது.சூரியனை நெருங்கும் புள்ளியும் ஒவ்வொரு சுற்றுக்கும் இடம் மாறுகிறது.
000000000000000000
நியூட்டன் கூறிய விளக்கம் தவறு.
கிரகங்கள் ஏன் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்ற கேள்வி எழுந்தது.

இந்தக் கேள்விக்கு சர் ஐசக் நியூட்டன் அவர்கள்,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையின் பாதிப்பு காரணமாக,கிரகங்களின் சுற்றுப் பாதையானது நீள் வட்டப் பாதையாக மாறி விடுகிறது, என்று ஒரு விளக்கத்தைக் கூறினார்.

ஆனால் இந்த விளக்கமானது ஒரு தவறான விளக்கம், என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக ஹாலி வால் நட்சத்திரமானது,எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றிச் செல்கிறது என்று கூறினாலும், கூட ...உண்மையில் ஹாலி வால் நட்சத்திரமானது.எழுபத்தி ஐந்து முதல் எழுபத்தி ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறையே சூரியனைச் சுற்றிச் செல்கிறது.

இவ்வாறு ஹாலி வால் நட்சத்திரமானது சூரியனைச்
 சுற்றிவரும் காலத்தில் மாறுபாடு ஏற்படுவதற்கு,வியாழன் மற்றும் சனி கிரகங்களின் ஈர்ப்பு விசையால்,ஹாலி வால் நட்சத்திரத்தின் பாதையில் சிறிது மாற்றம் ஏற்படுவதே காரணம் என்று நம்பப் படுகிறது.
ஆனால்,ஹாலி வால் நட்சத்திரத்தைப் போல் அல்லாமல்,பூமி உள்பட எல்லாக் கிரகங்களும்,ஒரே கால அளவில் சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது.

இதன் மூலம்,கிரகங்களின் நீள் வட்டப் பாதைக்கு,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசை பாதிப்பு என்று சர் ஐசக் நியூட்டன் கூறிய விளக்கம் தவறு என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
0000000000000
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்...
சூரியனின் கதிர் வீச்சு காரணமாகச் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கிரகத்தில் இருந்து,சோடியம்,கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற தனிமங்களின் வாயுக்கள் வெளியேறிக் கொண்டு இருப்பது, செயற்கைக் கோள் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டது.

இதைப் போலவே,வெள்ளி கிரகத்தில் இருந்தும் வாயுப் பொருட்கள் வெளியேறிக் கொண்டு இருப்பதும், செயற்கைக் கோள் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டது.

இதே போன்று,நிலவில் இருந்தும், சோடியம் வாயு வெளியேறிக் கொண்டு இருப்பதும், செயற்கைக் கோள் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டது.

அத்துடன்,பூமியில் இருந்து ஆக்சிஜன் வெளியேறிக் கொண்டு இருப்பதும், செயற்கைக் கோள் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டது.

இந்த நிலையில்,பூமிக்கு அடுத்த படியாக இருக்கும் செவ்வாய்க் கிரகத்தில் இருந்தும்,கார்பன்,ஆக்சிஜன்மற்றும் ஹைட்ரஜன்,வாயுக்களானது, வெளியேறிக் கொண்டு இருப்பது,செயற்கைக் கோள் ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

குறிப்பாகச் செவ்வாய்க் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக,அமெரிக்கா ,மாவென் என்ற செயற்கைக் கோளை ஏவியது.

அந்த செயற்கைக் கோளானது செவ்வாயை அடைந்த நேரம்,சைடிங் ஸ்ப்ரிங் என்ற வால் நட்சத்திரமானது,செவ்வாய்க் கிரகத்தை மிக நெருக்கமாகக் கடந்து சென்றது.

அதனால், அந்த வால் நட்சத்திரத்தின் வாலில் இருந்த தூசிப் பொருட்களானது, செவ்வாய்க் கிரகத்தின் வளி மண்டலத்தின் மேற்பரப்பில் விழுந்தது.
 

அதனைத் தொடர்ந்து, செவ்வாய்க் கிரகத்தின் வளி மண்டலத்தின் மேற்பரப்பை, செயற்கைக் கோள் மூலம் ஆய்வு செய்த பொழுது,அந்த வால் நட்சத்திரத்தில்,சோடியம்,மக்னீசியம்,இரும்பு,பொட்டாசியம்,மாங்கனீஸ்,நிக்கல்,குரோமியம் மற்றும்,துத்தநாகம் இருப்பதும் தெரிய வந்தது.
அதே போன்று,செவ்வாய்க் கிரகத்தில் இருந்தும்,கார்பன்,ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்கள் வெளியேறிக் கொண்டு இருப்பதும்,கண்டு பிடிக்கப் பட்டது.

இந்தக் கண்டு பிடிப்பானது,முன் ஒரு காலத்தில்,சூரியனைச் சுற்றி,தூசி மற்றும் வாயுக்களால் ஆன மண்டலமானது, லட்சக் கணக்கான ஆண்டு காலமாக,சுற்றிக் கொண்டு இருந்ததாகவும்,பின்னர் அதில் இருந்த தூசிகள் மற்றும் வாயுக்கள் திரண்டதால்,சூரியனுக்கு அருகில்,புதன்,வெள்ளி,மற்றும் பூமி போன்ற கிரகங்கள் உருவானதாகக் ,கூறப் படும் விளக்கத்திற்கு, சவால் விடுவதாக இருக்கிறது.

எப்படியென்றால்,செவ்வாய்க் கிரகத்திற்கு அருகில் வந்த வால் நட்சத்திரத்தில் இருந்த சோடியம்,மக்னீசியம்,இரும்பு,பொட்டாசியம்,மாங்கனீஸ் ,நிக்கல்,குரோமியம் மற்றும்,துத்தநாகம் ஆகிய உலோகங்கள்,பூமியிலும் காணப் படுகின்றன.

எனவே,சூரியனில் இருந்து அதிக தொலைவில் இருக்கும், செவ்வாய்க் கிரகத்துக்கு அருகிலேயே,மேலே குறிப்பிட்ட உலோகங்களானது,சூரிய ஒளியால் ஆவியாகி இருக்கும் நிலையில்,அதே உலோகங்களுடன்,தூசிமண்டலம் சூரியனுக்கு அருகில்,எப்படி ஆவியாகாமல் இருந்திருக்கும்,அதிலிருந்து எப்படி பூமி உருவாகி இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.


சூரியனில் இருந்து அதிக தொலைவில் இருக்கும் செவ்வாய் கிரகத்திற்கு அருகில்,சென்ற வால் நட்சத்திரத்தில் இருந்த உலோக வாயுக்களானது,சூரியக் கதிரால் ஆவியாகி இருக்கும் நிலையில்,செவ்வாய் கிரகத்தை விட, சூரியனில் இருந்து, குறைந்த தொலைவில்,இருக்கும் இடத்தில், அந்த வாயுக்களானது,ஆவியாகாமல் இருந்திருக்க சாத்தியம் இல்லை.
எனவே அந்த வாயுக்களுடன், பூமியானது,சூரியனுக்கு அருகில் உருவாகி இருக்கவும் இயலாது.
0000000000000000
எனது கண்டு பிடிப்புக்கு ஆதாரமாக ஒரு கிரகம்.
முன்னுரை 

தற்பொழுது ஏற்றுக் கொள்ளப் பட்ட கருத்தின் படி,முன் ஒரு காலத்தில்,விண் வெளியில்,இருந்த ராட்சத விண் மேகங்களானது,ஈர்ப்பு விசையால், தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,சுற்றி இருந்த தட்டையான பகுதிகளில் இருந்த தூசிகளும் வாயுக்களும், ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,கிரகங்கள் உருவானதாகவும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
 

இந்த நிலையில் நான் மேற்கொண்ட ஆய்வில்,ஒரு நட்சத்திரத்தை மற்றொரு நட்சத்திரம் ஈர்க்கும் பொழுது,ஈர்க்கப் பட்ட நட்சத்திரத்தின் வாயுக்களானது,ஈர்த்த நட்சத்திரத்தால் ஆவியாக்கப் படும் பொழுது,ஆவியாக்கப் பட்ட நட்சத்திரத்தின், மையத்தில்,அணுக் கரு வினையால் உருவாகி இருந்த, கனமான அணுக்களானது,கோளமாக உருவாகி, ஈர்த்த நட்சத்திரத்தை, கிரகமாக வலம் வந்து கொண்டு இருப்பது தெரியவந்தது.

எனது கண்டு பிடிப்பை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.

00000000000000

கடந்த 2014 ஆம் ஆண்டு,அமெரிக்கா,நெதர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள்,பூமியில் இருந்து முன்னூறு ஒளியாண்டு தொலைவில்,இருக்கும், ஹெச் டி- 106906 , என்று பெயரிடப் பட்ட ஒரு நட்சத்திரத்தை, ஒரு கிரகம் வலம் வந்து கொண்டு இருப்பதைக் கண்டு பிடித்தார்கள்.
 

இந்த நிலையில் கடந்த 2016, ஆண்டுதான் ,அந்த நட்சத்திரத்தைச் சுற்றி, நீள் வட்ட வடிவில், தூசிகள் மற்றும் வாயுக்களால் ஆன, தூசித் தட்டு இருப்பதை ,அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் படம் பிடித்தனர்.

குறிப்பாக ,அந்த நட்சத்திரத்தின்,தூசி மற்றும் வாயு மண்டலத்தில் இருந்து,சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தொலைவைக் காட்டிலும், அறுநூற்று ஐம்பது மடங்கு தொலைவில், அந்த கிரகம் இருந்தது.

அத்துடன், அந்த கிரகமானது,வியாழன் கிரகத்தை விட பதினோரு மடங்கு பெரிய அளவில் இருப்பதுடன்,அதன் நட்சத்திரத்தை, ஆயிரத்தி ஐநூறு ஆண்டுக்கு ஒரு முறை,நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்தது.

இவ்வாறு, அந்த கிரகமானது,அதன் நட்சத்திரத்தின் தூசித் தட்டில் இருந்து, அதிக தொலைவில் இருப்பதற்கு, கிரகங்களின் தோற்றம் குறித்த,நமது தற்போதைய கொள்கையில் விளக்கம் இல்லை என்று,அந்தக் கிரகத்தை ஆய்வு செய்த,கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, பேராசிரியரான, ஸ்மேதார் நாவோஸ் தெரிவித்து இருக்கிறார்.

பொதுவாக, இது போன்று ஒரு நட்சத்திரத்தில் இருந்து, அதிக தொலைவில் இருந்தபடி,ஒரு கிரகம் வலம் வந்து கொண்டு இருந்தால்,அந்த கிரகமானது,அதன் நட்சத்திரத்துக்கு அருகில் உருவாகிய பிறகு,வேறு ஒரு கிரகத்தால் அல்லது,
 தொலைவில் இருக்கும் ஒரு நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையால்,நட்சத்திரத்துக்கு அருகில் இருக்கும் கிரகமானது,அதிக தொலைவுக்கு தள்ளப் பட்டு இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுவார்கள்.
ஆனால்,அந்த கிரகத்தின் சுற்றுப் பாதை குறித்து,கணிப் பொறி மாதிரிகள் மூலம் பரிசோதனை செய்ததன் அடிப்படையில்,அந்தக் கிரகமானது, தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருப்பதாகவும், அந்த விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

அந்த கிரகத்தின் நீள் வட்டப் பாதையானது,அந்த நட்சத்திரத்தைச் சுற்றி இருக்கும் நீள்வட்ட வடிவிலான, தூசித் தட்டின் அமைப்பை, விளக்குவதாக இருக்கிறது என்றும், அந்த விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

அதாவது, அந்தக் கிரகத்தின் சுற்றுப் பாதையானது, நீள் வட்டமாக இருக்கிறது.

அந்தக் கிரகமானது,அதன் நட்சத்திரத்தை மிகவும் நெருங்கிய பிறகு,அதிக தொலைவுக்கு செல்கிறது.

அதனால், அந்தக் கிரகத்தின் ஈர்ப்பு விசையால்,அந்த நட்சத்திரத்தைச் சுற்றி இருக்கும் தூசித் தட்டும், நீள் வட்ட வடிவில் இருக்கிறது.

அதனால், அந்தத் தூசித் தட்டின் ஒரு பகுதியானது, அந்த நட்சத்திரத்துக்கு மிக அருகில் இருக்கிறது.

மற்ற பகுதியானது அதிக தொலைவில் இருக்கிறது.

அதனால், அந்த நட்சத்திரத்துக்கு அருகில் இருக்கும், தூசித் தட்டின் பகுதியானது, அதிக வெப்பமாகவும்,பிரகாசமாகவும்
 ஒளிர்கிறது.

இவ்வாறு, அந்த நட்சத்திரத்தைச் சுற்றி, நீள் வட்ட வடிவில் தூசி மண்டலம் இருப்பதற்கு, அந்தத் தூசித் தட்டில் வேறு ஏதாவது கிரகம் இருக்க வேண்டுமா என்பதைக் கணிப் பொறி மாதிரிகள் மூலம் பரிசோதனை செய்தனர்.

அப்பொழுது,வேறு ஒரு கிரகத்தின் ஈர்ப்பு விசை இன்றியே, அவ்வாறு அந்த நட்சத்திரத்தைச் சுற்றி,நீள் வட்ட வடிவிலான தூசி மண்டலம் உருவாகும் என்பது தெரிய வந்தது.

ஆனாலும், வேறு சில ஆராய்ச்சியாளர்கள்,அவ்வாறு அந்த நட்சத்திரத்தைச் சுற்றி நீள் வட்ட வடிவிலான தூசி மண்டலம் இருப்பதற்கு,அந்தத் தூசித் தட்டில், வேறு ஒரு கிரகம் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.

இந்தக் கிரக அமைப்பானது, எனது கண்டு பிடிப்புக்கு, சிறந்த ஆதாரமாக இருப்பதாக, நான் நம்புகிறேன்.

000000000000000000

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக